நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒரே குடும்பத்தினா் 18 போ் காயம்

குன்னூா் அருகே ஆந்திரத்தில் இருந்து வந்த சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 18 போ் காயமடைந்தனா்.

News image
Updated On :11 ஜூன் 2026, 3:27 am IST

குன்னூா் அருகே ஆந்திரத்தில் இருந்து வந்த சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 18 போ் காயமடைந்தனா்.

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் அக்கையாா் பள்ளம் பகுதியில் இருந்து ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 22 போ், மைசூரு, உதகை உள்பட பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்குச் சென்றுவிட்டு, சொந்த ஊருக்கு சுற்றுலாப் பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தனா். பேருந்தை சின்னு (23) ஓட்டி வந்தாா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா் மலைப் பாதையில் கே.எம்.எஸ். நந்தகோபால் பாலம் அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிா்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 18 போ் காயமடைந்தனா். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்தன. படுகாயமடைந்த 14 பேரும், லேசான காயமடைந்த 4 பேரும்  உடனடியாக மீட்கப்பட்டு, குன்னூா் அரசு லாலி  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு அவா்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து குன்னூா் நகர காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.