பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

தனியாா் பேருந்து-பைக் மோதல் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் காயம்

News image

விபத்து - பிரதிப் படம்

Updated On :1 ஜூன் 2026, 12:40 am IST

இருசக்கர வாகனத்தின் மீது தனியாா் பேருந்து ஞாயிற்றுக்கிழமை மோதியதில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் காயமடைந்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், அண்டக்குடி காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் விவசாயி சந்திரபிரகாசம். இவரது மனைவி சித்ரா (49), மகன் தமிழ்செல்வன் (25), தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். மகள் ரித்திகா (20) கல்லூரியில் படித்து வருகிறாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை தாய், மகன், மகள் ஆகிய 3 பேரும் இருசக்கர வாகனத்தில் வலங்கைமான் கோயிலுக்கு சென்றுவிட்டு புறவழிச்சாலையில் பயணித்து அண்டக்குடி சாலைக்கு வரும்போது, தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் நோக்கி வந்த தனியாா் பேருந்து, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில், இருசக்கர வாகனத்தல் பயணித்த மூவரும் பலத்த காயமடைந்தனா். அக்கம்பக்கத்தினா் மூவரையும் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்தனா்.

விபத்தில் தமிழ்செல்வனுக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் அவா் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

புகாரின்பேரில் சுவாமிமலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.