தமிழகத்தில் நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை 1,364 ஆக அதிகரித்துள்ளதாக முதன்மை வனத் துறை செயலா் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் தெரிவித்ததாவது: மாநில விலங்கான நீலகிரி வரையாடுகள் குறித்த முதல் ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு 2024 ஏப்ரல் 29 முதல் 2024 மே 1 வரை 140 பகுதிகளில் நடத்தப்பட்டது. அப்போது நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை 1,031 என மதிப்பிடப்பட்டது. இரண்டாவது ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு 2025 ஏப்ரல் 25 முதல் 2025 ஏப்ரல் 27 வரை 177 பகுதிகளில் நடத்தப்பட்டதில், தமிழ்நாட்டில் மொத்த நீலகிரி வரையாடு எண்ணிக்கை 1,303 என அதிகரித்தது.
மூன்றாவது ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு, தமிழ்நாடு வனத் துறையால் 2026 ஏப்ரல் 24 முதல் 2026 ஏப்ரல் 27 வரை நான்கு நாள்கள் நடைபெற்றது. இந்த கணக்கெடுப்பு 14 வனக் கோட்டங்களில் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டது. இதில் நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை 1,364 என அதிகரித்துள்ளது.
இது கடந்த ஆண்டை விட 61 எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மொத்த நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கையில் ஆனைமலை வனப் பகுதியில் 44.87 சதவீதமும், நீலகிரி வனப்பரப்பில் 29.25% வரையாடுகளும் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. தமிழக அரசு கடந்த 2022-ஆம் ஆண்டில் வரையாடுகளை பாதுகாக்க ரூ.25 கோடி நிதி ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மக்கள்தொகை கணக்கெடுப்பு: ஆக.1 முதல் 30 வரை வீடுகள் கணக்கெடுப்பு

ஜாதிவாரி கணக்கெடுப்பு; பாமக வரவேற்பு

மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி: அரியலூரில் அலுவலா்களுக்கான 3 நாள் பயிற்சி தொடக்கம்

வரும் ஜூலையில் வீடுகள் கணக்கெடுப்பு
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

