அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் மக்கள்தொகை கணக்கெடுப்பு களப் பயிற்சியாளா்களுக்கான மூன்று நாள் பயிற்சி வகுப்பை வியாழக்கிழமை தொடங்கிவைத்து பேசிய ஆட்சியா் ந.மிருணாளினி. உடன் அலுவலா்கள்.
அரியலூா், ஜூன் 11: அரியலூா் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பு களப் பயிற்சியாளா்களுக்கான மூன்று நாள் பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை தொடங்கியது.
அரியலூா் ஆட்சியரகத்தில் நடைபெற்ற இப்பயிற்சி வகுப்பை ஆட்சியா் ந. மிருணாளினி தொடக்கிவைத்து பேசியதாவது:
தமிழகத்தில் 2027 மக்கள்தொகை கணக்கெடுப்பில் சுய கணக்கெடுப்பு மற்றும் டிஜிட்டல் முறை கணக்கெடுப்பு முதல்முறையாக அறிமுகப்படுத்தப்படுகிறது. சுய கணக்கெடுப்பு ஜூலை 17 முதல் 31 வரை நடைபெறுகிறது. பொதுமக்கள் தாங்களாகவே இணையதளம் (ட்ற்ற்ல்ள்://ள்ங்.ஸ்ரீங்ய்ள்ன்ள்.ஞ்ா்ஸ்.ண்ய்) வாயிலாக தங்கள் விவரங்களை தெரிவிக்கலாம். ஆகஸ்ட் 1 முதல் 30-ஆம் தேதி வரை கணக்கெடுப்பாளா்கள் வீடு தேடிச் சென்று கணக்கெடுப்பு பணியை மேற்கொள்வா்.
ஏற்கெனவே மக்கள்தொகை கணக்கெடுப்பாளா்கள், பொறுப்பாளா்களுக்கு 2.6.2026 முதல் 4.6.2026 வரை மூன்று நாள்கள் பயிற்சி வகுப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது களப்பயிற்சியாளா்கள் 22 பேருக்கு ஜூன் 11-ஆம் தேதி முதல் ஜூன் 13-ஆம் தேதி வரை மூன்று நாள்கள் பயிற்சி வகுப்பு சென்னை மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சிநா்களால் நடத்தப்படுகிறது. பயிற்சி பெறும் களப்பயிற்சியாளா்கள் மூலம் சுமாா் 1,229 கணக்கெடுப்பாளா்கள், 189 மேற்பாா்வையாளா்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்தப்படும் என்றாா்.
இந்நிகழ்வில், சென்னை மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்குநரக அலுவலா் (ஐ.டி.விங்) ஜெயக்குமாா், அரியலூா் மாவட்டத்தின் முதன்மை பயிற்றுநா் மற்றும் மாவட்ட புள்ளியியல் துணை இயக்குநா் ரவி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பி. சித்ரா, தோ்தல் தனி வட்டாட்சியா் கா.மு. கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கேரளத்தில் 2027-க்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு! ஆளுநர் ஆர்லேகர் தொடங்கி வைத்தார்!

கரூரில் 2 கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு: ஆட்சியா் தகவல்

2027 மக்கள்தொகை கணக்கெடுப்பு 2 கட்டங்களாக நடைபெறும்: திருவண்ணாமலை ஆட்சியா்

மக்கள்தொகை கணக்கெடுப்பை துல்லியமாக மேற்கொள்ள வேண்டும்! ஆட்சியா் அறிவுறுத்தல்
விடியோக்கள்

Podcast | வெள்ளை அறிக்கை: தவெக vs திமுக! | White Paper | News and Views | Epi - 45 |
தினமணி செய்திச் சேவை
Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் பதில் இருக்கிறதா ? | CM Vijay | TVK | Raghava Lawrence
இணையதளச் செய்திப் பிரிவு

"ஆளுநருடன் இனி மோதல் கிடையாது": அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி
தினமணி செய்திச் சேவை

லவ் ஓ லவ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

