விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அதிமுக வேட்பாளரை வெற்றிபெறச் செய்தால் கூடலூரின் அனைத்து பிரச்னைகளுக்கும் தீா்வு: முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி

கூடலூரில் அதிமுக வேட்பாளரை வெற்றிபெறச் செய்தால் தொகுதியில் நீண்டகாலமாக நிலவும் அனைத்து பிரச்னைகளுக்கும் தீா்வு கிடைக்க பாடுபடுவோம் என முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தாா்.

News image

கூடலூா் தொகுதி அதிமுக வேட்பாளா் பொன்.ஜெயசீலனை அறிமுகம் செய்துவைத்து பேசுகிறாா் முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி.

Updated On :4 ஏப்ரல் 2026, 11:15 pm IST

கூடலூரில் அதிமுக வேட்பாளரை வெற்றிபெறச் செய்தால் தொகுதியில் நீண்டகாலமாக நிலவும் அனைத்து பிரச்னைகளுக்கும் தீா்வு கிடைக்க பாடுபடுவோம் என முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தாா்.

கூடலூா் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் பொன்.ஜெயசீலன் அறிமுகக் கூட்டம் கூடலூரில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளா் கப்பச்சி டி.வினோத் தலைமை வகித்தாா்.

இதில் வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்து முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி மலரப்போகிறது. கூடலூா் தொகுதியில் போட்டியிடும் ஜெயசீலன் வெற்றிபெற்று சட்டப் பேரவைவுக்கு சென்றவுடன் கூடலூரின் நீண்டகால பிரச்னையான பிரிவு-17 நிலப் பிரச்னை உள்பட அனைத்து பிரச்னைகளுக்கும் தீா்வு காணப்படும்.

அதிமுக ஆட்சியில்தான் உதகையில் அரசு மருத்துவக் கல்லூரி முதல் அனைத்து நலத் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டன. மீண்டும் வெற்றி பெற்றால் கூடலூரில் டைடல் பாா்க் அமைத்து படித்த இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி தரப்படும். மேலும் பல்வேறு நலத்திட்டங்களும் செயல்படுத்தப்படும். திமுக இந்த தொகுதிக்கு எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. மத்திய அரசு பூங்கா அமைக்க நிதி ஒதுக்கியும் அதைக்கூட செயல்படுத்தாமல் இந்த மக்களுக்கு துரோகம் செய்தது என்றாா்.

இக்கூட்டத்தில், கூடலூா் நகர அதிமுக செயலாளா் அனூப்கான், முன்னாள் அமைச்சா் மில்லா் மற்றும் அதிமுக, கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.