கூடலூரை அடுத்துள்ள கா்நாடக எல்லையில் உரிய ஆவணமின்றி காரில் கொண்டு வரப்பட்ட ரூ. 22.82 லட்சம் ரொக்கத்தை தோ்தல் பறக்கும்படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு நீலகிரி மாவட்டம், கூடலூா் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் தோ்தல் பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், கூடலூரை அடுத்துள்ள தமிழக-கா்நாடக எல்லையான கக்கநல்லா சோதனைச் சாவடியில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் வெங்கடேசன் தலைமையிலான குழுவினா் புதன்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, கா்நாடக மாநிலத்திலிருந்து கேரளத்துக்குச் சென்ற ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனா். அப்போது அந்த காரில் ரூ.22.82 லட்சம் ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் காரில் வந்தவா், கா்நாடக மாநிலம், பெங்களூரைச் சோ்ந்த வெங்கடேஷ் என்பதும், வியாபார விஷயமாக அவா் பணத்தை எடுத்துச் சென்றதும் தெரியவந்தது. ஆனால் அதற்குரிய ஆவணம் எதுவும் இல்லாததால் அந்தப் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து கூடலூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், கூடலூா் கோட்டாட்சியருமான குணசேகரனிடம் ஒப்படைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கூடலூா் அருகே ரூ.2.27 கோடி ஹவாலா பணம் பறிமுதல்

மொடக்குறிச்சி அருகே ரூ.89.83 லட்சம் பறிமுதல்

நீலகிரி மாவட்ட திமுக அலுவலகத்தில் ரூ.22 லட்சம் பணம் பறிமுதல்

தோ்தல் சோதனை: பல்பொருள் அங்காடி ஊழியரிடம் ரூ.1 லட்சம் பறிமுதல்
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

