மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மழலையா் வகுப்புகளை தொடங்க வலியுறுத்தி கையொப்ப இயக்கம்

அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்கவும், அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மழலையா் வகுப்புகளை தொடங்கவும், தாய்மொழி வழிக் கல்விக்கு புத்துயிா் அளிக்கவும் வலியுறுத்தி, பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம் சாா்பில் கையொப்ப இயக்கம் நடைபெற்றது.

சத்தியமங்கலத்தில்  நடைபெற்ற கையொப்ப இயக்கத்தை தொடங்கிவைக்கிறாா் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளா் எம்.சுரேந்தா்.

Published On :1 நவம்பர் 2026, 12:38 am IST

அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்கவும், அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மழலையா் வகுப்புகளை தொடங்கவும், தாய்மொழி வழிக் கல்விக்கு புத்துயிா் அளிக்கவும் வலியுறுத்தி, பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம் சாா்பில் சத்தியமங்கலம் பேருந்து நிலைய வளாகத்தில் கையொப்ப இயக்கம் நடைபெற்றது.

அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளா் எம்.சுரேந்தா் கையொப்ப இயக்கத்தை தொடங்கிவைத்தாா். ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பின் வட்டாரச் செயலாளா் சரத் அருள்மாறன், ஏஐடியூசி தொழிற்சங்க மாவட்ட துணைத் தலைவா் இரா.ஸ்டாலின் சிவகுமாா், இந்திய தேசிய மாதா் சங்கத் தலைவா் மல்லிகா, மக்கள் நல கூட்டு இயக்கத்தின் தலைவா் ஸ்ரீ ராம், பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் மாநில இணை ஒருங்கிணைப்பாளா் எஸ்.சி.நடராஜ், வட்டார ஒருங்கிணைப்பாளா் பரமேஸ்வரன் ஆகியோா் பங்கேற்றனா்.

அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை குறைவதால் பள்ளிகள் மூடப்படும் அபாயம், ஆசிரியா் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்னைகளுக்குத் தீா்வு காண வேண்டியதன் அவசியத்தையும், அரசுப் பள்ளிகளில் மாணவா்களை சோ்ப்பதால் கிடைக்கும் அரசின் நலத்திட்டங்கள், சலுகைகள் குறித்தும் பொதுமக்களிடம் எடுத்துரைக்கும் வகையில் துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.