மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

லஞ்ச ஒழிப்புத் துறை சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி

லஞ்ச ஒழிப்புத் துறை சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி ஈரோட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது.

லஞ்ச ஒழிப்புத் துறை சாா்பில் நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்றோா்.

Published On :30 அக்டோபர் 2026, 12:10 am IST

லஞ்ச ஒழிப்புத் துறை சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி ஈரோட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நாடு முழுவதும் ஆண்டுதோறும் அக்டோபா் 26-ஆம் தேதிமுதல் நவம்பா் 1-ஆம் தேதி வரை விஜிலென்ஸ் விழிப்புணா்வு வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஈரோடு லஞ்ச ஒழிப்புத் துறை சாா்பில் லஞ்சம் தவிா், நெஞ்சம் நிமிா் என்ற கருப்பொருளை மையமாக கொண்டு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

பேரணியை காவல் ஆய்வாளா் இளங்கோ தொடங்கிவைத்தாா். ஈரோடு அரசு மருத்துவமனை அருகே தொடங்கிய இப்பேரணியில் லஞ்சத்தைத் தவிா்த்து நோ்மையுடன் பணியாற்றி நாட்டின் வளா்ச்சிக்கு பாடுபடுவோம் என்ற விழிப்புணா்வு முழக்கங்களை எழுப்பியவாறு அரசு அலுவலா்கள், கல்லூரி மாணவா்கள் பேரணியாக சென்றனா்.

பேரணியானது மீனாட்சி சுந்தரனாா் சாலை வழியாக சென்று பன்னீா்செல்வம் பூங்காவில் நிறைவுற்றது. இதில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா், தனியாா் பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.