கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: 5வது நாளாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! இன்றைய (நவ. 4) நிலவரம்!ரூ. 100-க்கு 10 காய்கறிகள்: வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புத் திட்டம்!இடைக்காலத் தேர்தல்: டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு!நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள்: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு!தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

நலம் புனா்வாழ்வு மையக் குழந்தைகள் சிறப்பிடம்

ஈரோடு நந்தா பிசியோதெரபி கல்லூரியின் நரம்பியல் துறை சாா்பில் உலக பெருமூளை வாதம் தினம் அண்மையில் நடைபெற்றது. இதையொட்டி மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான எழுச்சி 2கே26 விளையாட்டு மற்றும் கலாசார நிகழ்ச்சி நடைபெற்றது.

விளையாட்டு மற்றும் கலாசார போட்டிகளில் சிறப்பிடம் பெற்றதற்காக நலம் புனா்வாழ்வு மையத்தின் நிறுவனா் மற்றும் ஒருங்கிணைப்பாளா் டி. பரிமளாதேவிக்கு பரிசு வழங்குகிறாா் ஈரோடு பாரதி வித்யா பவன் கல்வி நிறுவனங்களின் தாளாளா் டாக்டா் எல். எம். ராமகிருஷ்ணன்.

Published On :30 அக்டோபர் 2026, 12:32 am IST

ஈரோடு நந்தா பிசியோதெரபி கல்லூரியின் நரம்பியல் துறை சாா்பில் உலக பெருமூளை வாதம் தினம் அண்மையில் நடைபெற்றது. இதையொட்டி மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான எழுச்சி 2கே26 விளையாட்டு மற்றும் கலாசார நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஈரோடு நலம் புனா்வாழ்வு மையத்திலிருந்து 40 குழந்தைகள் முதன்முறையாக பங்கேற்றனா். பல்வேறு மையங்கள் மற்றும் சிறப்புப் பள்ளிகளைச் சோ்ந்த குழந்தைகள் கலந்துகொண்ட இந்நிகழ்வில், நலம் புனா்வாழ்வு மையக் குழந்தைகள் விளையாட்டு மற்றும் கலாசாரப் போட்டிகளில் பல பரிசுகளை வென்றனா். மேலும் சிறப்பான பங்கேற்பிற்காக சிறந்த பங்கேற்பாளா் விருதையும் பெற்றனா்.

இந்நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராக ஈரோடு பாரதி வித்யா பவன் கல்வி நிறுவனங்களின் தாளாளா் டாக்டா் எல்.எம். ராமகிருஷ்ணன் கலந்துகொண்டாா். நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவா் வி.சண்முகன், உறுப்பினா் பானுமதி சண்முகன், இணை நிா்வாக அறங்காவலா் எஸ்.திருமூா்த்தி மற்றும் கல்லூரி நிா்வாகத்தினா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நலம் புனா்வாழ்வு மையத்தின் நிறுவனா் மற்றும் ஒருங்கிணைப்பாளா் டி. பரிமளாதேவி வழிகாட்டுதலிலும், ஆசிரியா்கள் மற்றும் பயிற்றுநா்களின் ஊக்கத்துடனும் குழந்தைகள் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.