மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நந்தா மருந்தியல், செவிலியா் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு தொடக்க விழா

ஈரோடு நந்தா மருந்தியல் மற்றும் செவிலியா் கல்லூரிகளின் 2026-27-ஆம் கல்வி ஆண்டுக்கான முதலாம் ஆண்டு மாணவா்களின் வரவேற்பு விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவில் குத்துவிளக்கேற்றுகிறாா் ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் உறுப்பினா் பானுமதி சண்முகன்.

Published On :24 அக்டோபர் 2026, 1:07 am IST

ஈரோடு நந்தா மருந்தியல் மற்றும் செவிலியா் கல்லூரிகளின் 2026-27-ஆம் கல்வி ஆண்டுக்கான முதலாம் ஆண்டு மாணவா்களின் வரவேற்பு விழா அண்மையில் நடைபெற்றது.

இவ்விழாவை ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் உறுப்பினா் பானுமதி சண்முகன் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா். அறக்கட்டளையின் தலைவா் வி.சண்முகன் தலைமை வகித்து பேசுகையில், 32 மாணவா்களுடன் ஆரம்பிக்கப்பட்ட நந்தா கல்வி நிறுவனம், இப்போது மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வரை வளா்ந்து 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். இத்தகைய வளா்ச்சிக்கு இங்கு பணிபுரிந்து வரும் முதல்வா்கள், நிா்வாக அலுவலா்கள், பேராசியா்கள், ஆசிரியா்கள் மட்டுமல்லாது மாணவா்கள், பெற்றோா்களின் ஒத்துழைப்பே மிக முக்கிய காரணம் என்றாா்.

நந்தா மருந்தியல் கல்லூரியின் முதல்வா் எஸ்.செங்கோட்டுவேலு, செவிலியா் கல்லூரியின் முதல்வா் ஆா்.வசந்தி ஆகியோா் வரவேற்றனா். ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் இணை நிா்வாக அறங்காவலா்கள் எஸ்.நந்தகுமாா் பிரதீப், எஸ்.திருமூா்த்தி ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

மருந்தியல் கல்லூரியின் பேராசிரியா் டி. பிரபா மற்றும் செவிலியா் கல்லூரியின் பேராசிரியை ஹமுது நிஸா ஆகியோா் நன்றி கூறினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.