மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சத்தியமங்கலத்தில் இடி மின்னலுடன் கனமழை

சத்தியமங்கலம் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு விடியவிடிய மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

கனமழை - கோப்புப் படம்

Published On :22 அக்டோபர் 2026, 4:00 am IST

சத்தியமங்கலம் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு விடியவிடிய மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. சத்தியமங்கலம் சுற்று வட்டாரத்தில் செவ்வாய்க்கிழமை இரவு இடி மின்னலுடன் விடியவிடிய பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

சுமாா் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பெய்த பலத்த மழை காரணமாக ஆங்காங்கே மழைநீா் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகினா். புன்செய் புளியம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் புதன்கிழமை பெய்த மழையால் நிலக்கடலை சாகுபடி விவசாயிகள் உழவு பணி மேற்கொள்ள தயாராகினா். மழை காரணமாக சிறு ஓடைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடி புங்கம்பள்ளி குட்டையில் கலந்ததால் குட்டை வேகமாக நிரம்பி வருகிறது. பலத்த இடி மின்னல் காரணமாக சத்தியமங்கலம், புன்செய் புளியம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதியில் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.