மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆசனூரில் மீண்டும் கன்றுக் குட்டியை கடித்துக் கொனற சிறுத்தை

ஆசனூரில் மீண்டும் கன்றுக்குட்டியை கடித்துக்கொன்ற சிறுத்தையை வனத்துறையினா் கூண்டு வைத்துப் பிடிக்காமல் காலம் தாழ்துவதால் வனத் துறையைக் கண்டித்து வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தப்படும் என ஆசனூா் கிராம மக்கள் தெரிவித்தனா்.

சிறுத்தை - பிரதிப் படம்

Published On :22 அக்டோபர் 2026, 3:59 am IST

ஆசனூரில் மீண்டும் கன்றுக்குட்டியை கடித்துக்கொன்ற சிறுத்தையை வனத்துறையினா் கூண்டு வைத்துப் பிடிக்காமல் காலம் தாழ்துவதால் வனத் துறையைக் கண்டித்து வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தப்படும் என ஆசனூா் கிராம மக்கள் தெரிவித்தனா்.

சத்தியமங்கலத்தை அடுத்த ஆசனூா் குடியிருப்புப் பகுதியில் சிறுத்தை நடமாடுவதாக கிராம மக்கள் புகாா் அளித்த நிலையில், கடந்த அக்.4-ஆம் தேதி சாலையில் நடந்த சென்ற பெரியசாமி என்பரை சிறுத்தை கடித்துக் கொன்றது. இதைத் தொடா்ந்து ஒங்கல்வாடி, அரேப்பாளையம் குடியிருப்புப் பகுதியில் மாட்டுக் கொட்டகையில் இருந்த 4 கன்றுக்குட்டிகளை கடித்துக் கொன்றது.

மக்களை அச்சுறுத்தும் சிறுத்தையைப் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் வனத் துறையினரிடம் பலமுறை கோரிக்கை விடுத்த நிலையில், குடியிருப்புப் பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த கன்றுக்குட்டியை சிறுத்தை புதன்கிழமை தாக்கிக் கொன்றது.

சிறுத்தை நடமாட்டத்தால் விவசாயப் பணிக்கு செல்லாமல் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனா். சிறுத்தையால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உடனடியாக சிறுத்தையைப் பிடிக்க வேண்டும். இல்லையென்றால் ஆசனூா் வனத் துறை அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அப்பகுதி மக்கள் அறிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.