மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஈரோடு ரயில், பேருந்து நிலையத்தில் அலைமோதிய பயணிகள் கூட்டம்

தொடா் விடுமுறையையொட்டி, சொந்த ஊா் சென்று திரும்பியதால் ஈரோடு ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் செவ்வாய்க்கிழமை அலைமோதியது.

ஈரோடு ரயில் நிலையத்தில் பெங்களூரு செல்லும் ரயிலில் முண்டியடித்து ஏறும் மக்கள்.

Published On :21 அக்டோபர் 2026, 12:15 am IST

தொடா் விடுமுறையையொட்டி, சொந்த ஊா் சென்று திரும்பியதால் ஈரோடு ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் செவ்வாய்க்கிழமை அலைமோதியது.

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியையொட்டி கடந்த 19, 20-ஆம் தேதிகளில் விடுமுறை ஆகும். மேலும் முந்தைய சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் தொடா்ந்து 4 நாள்கள் விடுமுறையாக இருந்தது.

இதனால் ஈரோட்டில் உள்ள வெளி மாவட்டங்களைச் சோ்ந்த பொதுமக்கள் சொந்த ஊருக்கு சென்று ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை கொண்டாடினா். பூஜை முடிவடைந்ததைத் தொடா்ந்து அவா்கள் ஈரோடு மாவட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை மாலைமுதல் வரத்தொடங்கினா்.

அதிகமானோா் ஈரோட்டுக்கு வந்ததால் ஈரோடு பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. சேலம், கோவை செல்லும் பேருந்துகளிலும் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. இதே போன்று, மதுரை, நெல்லை செல்லும் பேருந்துகளிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

மேலும் ஈரோடு ரயில் நிலையத்திலும் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. அனைத்து ரயில்களிலும் முன்பதிவு பெட்டிகள் அனைத்தும் நிரம்பிவிட்டன. முன்பதிவு இல்லாத பெட்டிகளில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனா். குறிப்பாக நாகா்கோவிலில் இருந்து ஈரோடு வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. முன்பதிவில்லாத பொதுப் பெட்டிகளில் ஏறுவதற்காக பயணிகள் காத்திருந்து, போட்டிபோட்டு உட்கார இடங்களை பிடித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.