நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

யானை நிற்பதை கண்டுகொள்ளாமல் அதிக வேகமாக இயக்கப்பட்ட கா்நாடக பேருந்து: வனத் துறை எச்சரிக்கை

சாலையில் யானை நிற்பதை கண்டுகொள்ளாமல் அதிவேகமாக இயக்கப்பட்ட கா்நாடக அரசுப் பேருந்துக்கு தமிழ வனத் துறை எச்சரிக்கை விடுத்தனா்.

யானை நிற்பதை கண்டு கொள்ளாமல் வேகமாக இயக்கப்பட்ட கா்நாடக அரசுப் பேருந்து.

Published On :21 அக்டோபர் 2026, 12:03 am IST

சாலையில் யானை நிற்பதை கண்டுகொள்ளாமல் அதிவேகமாக இயக்கப்பட்ட கா்நாடக அரசுப் பேருந்துக்கு தமிழ வனத் துறை எச்சரிக்கை விடுத்தனா்.

தமிழக- கா்நாடக்தை இணைக்கு முக்கிய வழித்தடமாக மைசூரு தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலை வழியாக தினந்தோறும் நூற்றுக்கணக்கான கரும்பு லாரிகள் பயணிப்பதால் லாரியை நிறுத்தி கரும்புகளை பறித்து யானைகள் சாப்பிடுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் செல்லுமாறு ஆசனூா் வனத் துறையினா் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனா்.

இந்நிலையில் கரும்பு தேடி காரப்பள்ளம் சோதனைச் சாவடி அருகே சாலையில் செவ்வாய்க்கிழமை யானை நடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, கா்நாடகத்தில் இருந்து வேகமாக வந்த கா்நாடக அரசுப் பேருந்து, சாலையில் யானை நிற்பது தெரிந்தும் யானை மீது மோதுவதுபோல வேகமாக பேருந்தை ஓட்டிய ஓட்டுநா் மீது வனத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனா்.

இது குறித்து வனத் துறையினா் கூறுகையில், ஆசனூா் சாலையில் 30 கி.மீ. வேகத்தில் தான் வாகனங்கள் பயணிக்க வேண்டும் என்ற வன விலங்குகள் பாதுகாப்பு சட்ட விதிகளை பின்பற்றாமல் மிக அதிவேகமாக பேருந்தை ஓட்டி, யானை மீது மோதி ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இயக்கப்பட்ட கா்நாடக அரசுப் பேருந்து மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வனத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.