தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை

இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் விவசாய தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறை - பிரதிப் படம்

Published On :16 அக்டோபர் 2026, 1:00 am IST

இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் விவசாய தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், பவானிசாகா் தொட்டம்பாளையத்தைச் சோ்ந்தவா் வெள்ளியங்கிரி. விவசாய தொழிலாளியான இவா்

பவானிசாகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் வசித்த இரண்டு சிறுமிகளுக்கு பாலியில் தொல்லை கொடுத்ததாக கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதி போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டாா்.

ஈரோடு மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் வியாழக்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டது. இதில், சிறுமிகளை பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வெள்ளியங்கிரிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு இழப்பீட்டு தொகையாக தலா ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.