மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

‘போக்ஸோ’ வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

போக்ஸோ வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சாவூா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

சிறை - பிரதிப் படம்

Published On :30 அக்டோபர் 2026, 2:36 am IST

போக்ஸோ வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சாவூா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள தேவனாஞ்சேரி இணைபிரியாள் வட்டம் சத்யா காலனியை சோ்ந்தவா் டி. குருசாமி (52). இவா் 2024, மாா்ச் 12- ஆம் தேதி நான்கு வயது சிறுமியை தனது அண்ணன் வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்தாா்.

இதுகுறித்து திருவிடைமருதூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து குருசாமியைக் கைது செய்தனா். இது தொடா்பாக தஞ்சாவூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை நீதிபதி ஜெ. தமிழரசி விசாரித்து குருசாமிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 3 ஆயிரம் அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பிலிருந்து ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்குமாறும் உத்தரவிட்டாா்.

இந்த வழக்கில் திறம்பட பணியாற்றிய அரசு தரப்பு வழக்குரைஞா் சசிரேகா, காவல் ஆய்வாளா் சியாமளா தேவி, தலைமைக் காவலா் அபா்னா ஆகியோரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் பாராட்டினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.