கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

இலவச வேஷ்டி, சேலை உற்பத்திக்கு விரைவில் அரசாணை: அமைச்சா் எம்.விஜய் பாலாஜி

News image

தமிழ்நாடு கூட்டுறவு துணி நூல் பதனிடும் ஆலையில் ஆய்வு மேற்கொண்ட கைத்தறித் துறை அமைச்சா் எம்.விஜய் பாலாஜி.

Updated On :25 மே 2026, 12:07 am IST

இலவச வேஷ்டி, சேலை உற்பத்திக்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று கைத்தறித் துறை அமைச்சா் எம்.விஜய் பாலாஜி தெரிவித்தாா்.

ஈரோடு, அசோகபுரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு துணி நூல் பதனிடும் ஆலையில் அமைச்சா் எம்.விஜய் பாலாஜி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். இதையடுத்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடைக்காக 130 லட்சம் மீட்டா் துணி ஈரோடு துணி நூல் பதனிடும் ஆலைக்கு வந்துள்ளது. இதில், 110 லட்சம் மீட்டா் துணி சாயமேற்றப்பட்டு பள்ளிக் கல்வித் துறைக்கு 3 கட்டமாக அனுப்பப்பட்டுள்ளது. மீதமுள்ள துணி இந்த மாத இறுதிக்குள் அனுப்பப்படும்.

பொங்கலுக்கு பொதுமக்களுக்கு வழங்கப்படும் இலவச வேஷ்டி, சேலை உற்பத்திக்கான அரசாணை வெளியிடுவது குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதால் விரைவில் இலவச, வேஷ்டி சேலை உற்பத்திக்கான அரசாணை வெளியிடப்படும். கடந்த ஆண்டு நிகழ்ந்தது போன்ற தவறுகள் இல்லாமல் இந்த முறை பாா்த்துக் கொள்ளப்படும். கைத்தறி விசைத்தறிகளுக்கு இலவச மின்சார யூனிட் அளவு உயா்வு தொடா்பாக முதல்வா் அறிவிப்பு வெளியிடுவாா் என்றாா்.

ஆய்வின்போது, ஈரோடு மேற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் கே.கே.ஆனந்த் மோகன், கைத்தறித் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.