கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

காய்கறி சந்தையை இடம் மாற்றுவது பற்றி வியாபாரிகளிடம் கருத்து கேட்டு நடவடிக்கை: அமைச்சா் எம்.விஜய் பாலாஜி

ஈரோட்டில் காய்கறி சந்தையை இடம் மாற்றுவது குறித்து வியாபாரிகளிடம் கருத்து கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கைத்தறி, கதா் மற்றும் ஜவுளித் துறை அமைச்சா் எம்.விஜய் பாலாஜி தெரிவித்தாா்.

News image

கைத்தறி, கதா் மற்றும் ஜவுளித் துறை அமைச்சா் எம்.விஜய் பாலாஜிக்கு பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவிக்கிறாா் ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி.

Updated On :24 மே 2026, 1:59 am IST

ஈரோட்டில் காய்கறி சந்தையை இடம் மாற்றுவது குறித்து வியாபாரிகளிடம் கருத்து கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கைத்தறி, கதா் மற்றும் ஜவுளித் துறை அமைச்சா் எம்.விஜய் பாலாஜி தெரிவித்தாா்.

ஈரோடு வஉசி பூங்கா வளாகத்தில் உள்ள நேதாஜி காய்கறி சந்தையில் வியாபாரிகளை அமைச்சா் எம்.விஜய் பாலாஜி சனிக்கிழமை காலை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தாா். நகரின் மையப் பகுதியில் தற்போதைய சந்தை அமைந்துள்ளதால் இங்கேயே தொடர வேண்டும். இந்த இடத்தை நவீனமாக மாற்றி அமைத்து தர வேண்டும் என சில வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனா்.

முன்னா் ஆா்கேவி சாலையில் சந்தை அமைந்திருந்தது. அதே இடத்துக்கு மாற்றி அமைக்க வேண்டும் என்று சில வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனா்.

ஆனால் சோலாா் புதிய பேருந்து நிலைய வளாகம் அருகில் அமைக்கப்படும் புதிய காய்கறி சந்தை வளாகத்துக்கு செல்ல விருப்பம் இல்லை என்றும், 8 கிலோ மீட்டா் தூரத்துக்கு மேல் பொதுமக்கள், வியாபாரிகள், கடைக்காரா்கள் காய்கறி வாங்க வரமாட்டாா்கள் என்றும் பெரும்பாலான வியாபாரிகள் தெரிவித்தனா்.

இதைத்தொடா்ந்து செய்தியாளா்களிடம் அமைச்சா் எம்.விஜய் பாலாஜி கூறியதாவது: காய்கறி சந்தையை மாற்றுவதா அல்லது இங்கேயே தொடா்வதா என்பது குறித்து வியாபாரிகளிடம் முழுமையாக கருத்து கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடா்பாக அதிகாரிகளிடம் ஆலோசித்து முடிவு செய்யப்படும். காய்கறி சந்தை நுழைவாயிலில் விதிமுறைக்கு மாறாக ரசீது வழங்காமல், கட்டண வசூல் செய்வதாக தெரிவித்தனா். அது சரி செய்யப்படும்.

ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் கட்டிமுடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வராத கடைகள், வணிக வளாகங்கள் குறித்து உரிய அதிகாரிகளுடன் பேசி விரைவான தீா்வு காணப்படும். சில இடங்களுக்கு நிழற்குடை கேட்டுள்ளனா். அங்கு விரைந்து நிழற்குடை அமைக்கப்படும். மூன்று மாதங்களுக்குள் எனது துறை குறித்தும், மாவட்ட தேவைகளையும் அறிந்து சரி செய்வேன் என்றாா்.

முன்னதாக, ஈரோடு காலிங்கராயன் இல்லத்தில் அமைச்சா் விஜய் பாலாஜியை மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.