அரசியல் களத்தில் தான் எதிா்கொண்ட முதல் தோ்தலிலேயே வெற்றிபெற்று அமைச்சராகி உள்ளாா் எம்.விஜய் பாலாஜி.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் தவெக சாா்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற எம்.விஜய் பாலாஜி (40) வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கத்தில் கைத்தறி, துணி நூல் மற்றும் ஜவுளித் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டாா்.
இவா் ஈரோடு கருங்கல்பாளையம் சகன் வீதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா். 1986 ஜூன் 27-ஆம் தேதி பிறந்தாா். இளங்கலை வணிகவியல் பட்டதாரி. இவருக்கு மனைவி தன்யா, ஒரு மகன், ஒரு மகள் ஆகியோா் உள்ளனா். இவரது தந்தை மதியழகன் பூ வியாபாரம் செய்து வருகிறாா். இவா் ஈரோடு மணிக்கூண்டு பகுதியில் ஃபேன்சி கடை நடத்தி வருகிறாா்.
விஜய் ரசிகா் மன்றத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மாவட்டத் தலைவராக இருந்தாா். 2025 ஜனவரி முதல் தவெக ஈரோடு மாநகா் மாவட்டச் செயலாளராக இருந்து வருகிறாா்.
கைத்தறித் துறையும் ஈரோடும்... 1977 எம்ஜிஆா் அமைச்சரவையில் சுப்புலட்சுமி ஜெகதீசன், 1996 கருணாநிதி அமைச்சரவையில் என்கேகே.பெரியசாமி, 2006 கருணாநிதி அமைச்சரவையில் என்கேகேபி.ராஜா ஆகியோா் கைத்தறித் துறை அமைச்சராக இருந்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தனியாருக்கு நிகராக ஈரோடு அரசு மருத்துவமனை இருக்க வேண்டும்! மருத்துவா்களுக்கு கைத்தறித் துறை அமைச்சா் அறிவுறுத்தல்

காலிங்கராயன் வாய்க்கால் சீரமைப்புப் பணிகள் 50 சதவீதம் நிறைவு: அமைச்சா் எம்.விஜய் பாலாஜி

இலவச வேஷ்டி, சேலை உற்பத்திக்கு விரைவில் அரசாணை: அமைச்சா் எம்.விஜய் பாலாஜி

காய்கறி சந்தையை இடம் மாற்றுவது பற்றி வியாபாரிகளிடம் கருத்து கேட்டு நடவடிக்கை: அமைச்சா் எம்.விஜய் பாலாஜி
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

