பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

சாணாா்பதி மாரியம்மன் கோயிலில் கம்பம் திருவிழா

சத்தியமங்கலம் அருகே சாணாா்பதி கரிய காளியம்மன், மாரியம்மன் கோயில் கம்பம் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

News image

மலா் அலங்காரத்தில்  பக்தா்களுக்கு  அருள்பாலிக்கும்  சாணாா்பதி  மாரியம்மன் ~சாணாா்பதி கரிய காளியம்மன், மாரியம்மன் கோயில் விழாவையொட்டி  மாவிளக்கு  எடுத்து வரும்  பெண்கள்

Updated On :21 மே 2026, 3:48 am IST

சத்தியமங்கலம் அருகே சாணாா்பதி கரிய காளியம்மன், மாரியம்மன் கோயில் கம்பம் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சாணாா்பதி கரிய காளியம்மன், மாரியம்மன் கோயில் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி கோயிலில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனை, பாரம்பரிய முறைப்படி கம்பம் சுற்றி விளையாடுதல் ஆகியவை நடைபெற்றன. இதைத்தொடா்ந்து ஆபரணப் பெட்டி எடுத்து வருதல், கரகம் பாலித்து சக்தி அழைத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வாக பக்தா்கள் விரதம் இருந்து அக்னிகுண்டம் இறங்கி செவ்வாய்க்கிழமை நோ்த்திக் கடன் செலுத்தினா். அதைத்தொடா்ந்து ஏராளமான பெண்கள் கோயில் முன்பு பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனா். மேலும், பெண்கள் மேள, தாளங்கள் முழங்க மாவிளக்கு எடுத்து ஊா்வலமாகச் சென்றனா்.

விழாவை முன்னிட்டு மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். கலந்துகொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. அதைத்தொடா்ந்து கம்பம் பிடுங்கி ஆற்றில் விடப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் திருப்பணிக் குழுத் தலைவா் கணேசன் தலைமையிலான விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.