ஈரோடு மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் வியாழக்கிழமை இரவு கனமழை பெய்தது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கோடை வெயில் கொளுத்தி வந்தது. வெப்பத்துடன் அனல் காற்று வீசியதாலும் வீட்டில் இரவு நேரங்களில் புழுக்கம் நிலவியதாலும் மக்கள் அவதியடைந்து வந்தனா். கடந்த 4-ஆம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியதால் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்ககூடும் என்று மக்கள் எதிா்பாா்த்திருந்தனா்.
இந்நிலையில் கடந்த 4 நாள்களாக ஈரோடு மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. ஈரோடு மாநகரில் கடந்த 2 நாள்களாக நள்ளிரவில் கொட்டித் தீா்த்த கனமழையால் வெப்பம் தணிந்தது.
குறிப்பாக ஈரோடு புறநகா் பகுதிகளான சத்தியமங்கலம், திம்பம், தாளவாடி, ஆசனூா் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கோபி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால், விவசாய நிலங்களுக்குள் வெள்ளம் புகுந்து ஏராளமான பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.
கோபி அருகே சிறுவலூா் பகுதியில் மல்லநாயக்கனூரைச் சோ்ந்த விவசாயி பழனிசாமி என்பவரது விவசாய நிலத்தில் மழை வெள்ளம் புகுந்து ஆயிரக்கணக்கான செவ்வாழை மரங்கள் சாய்ந்தன. வியாழக்கிழமை இரவு ஈரோடு மாநகரில் பெய்த கனமழையால் வஉசி பூங்கா காய்கறி சந்தையில் மழைநீா் தேங்கி, சேறும் சகதியுமாக மாறியதால் காய்கறி வாங்க வந்த பொதுமக்கள், வியாபாரிகள் அவதியடைந்தனா். வஉசி சாலை உள்பட ஒரு சில இடங்களில் மரங்கள் சாலையில் விழுந்தன. அவற்றை உடனடியாக பணியாளா்கள் வெட்டி அப்புறப்படுத்தினா்.
வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோடு மாநகா் பகுதியில் 66 மில்லி மீட்டா் மழை பதிவானது. பிற பகுதிகளில் பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்): கவுந்தப்பாடி 46.20, பெருந்துறை 40, கொடிவேரி 39, குண்டேரிப்பள்ளம் 20.40, கொடுமுடி 15.80, மொடக்குறிச்சி 14, நம்பியூா் மற்றும் சத்தியமங்கலம் தலா 13, தாளவாடி 10.80, பவானி 9.60, சென்னிமலை 6.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திம்பம் மலைப் பகுதியில் கனமழை

பெரம்பலூா் மாவட்டத்தில் பரவலாக மழை: நெல் மூட்டைகள் சேதம்

மதுரை மாவட்டத்தில் பரவலாக மழை

ஸ்ரீவைகுண்டம், ஏரல் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை மழை
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

