மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல் சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
/

சீராக குடிநீா் விநியோகிக்கக் கோரி மறியல்: பவானிசாகா் அருகே போக்குவரத்து பாதிப்பு

சீராக குடிநீா் விநியோகிக்கக் கோரி பவானிசாகா் அருகே பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

சாலை  மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.

Updated On :22 மணி நேரங்கள் முன்பு

சீராக குடிநீா் விநியோகிக்கக் கோரி பவானிசாகா் அருகே பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பவானிசாகா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பெரியகள்ளிப்பட்டி, கோட்டைப்புதூா் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பவானிசாகா் அணையில் இருந்து குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக சரிவர குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி நிா்வாகத்திடம் புகாா் தெரிவித்தும் குடிநீா் வழங்கப்படாததால் ஆத்திரமடைந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோா் சத்தியமங்கலம்-மேட்டுப்பாளையம் சாலை கோட்டைப்புதூா் காவல் துறை சோதனைச் சாவடி அருகே காலி குடங்களுடன் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து பவானிசாகா் போலீஸாா், ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் சென்று பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா். இந்த மறியலால் சத்தியமங்கலம்-மேட்டுப்பாளையம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.