செப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!மத்திய அரசுடன் மோதல் போக்கை விரும்பவில்லை! முதல்வர் விஜய் உலக சாதனை படைத்த மெஸ்ஸி: நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய அர்ஜென்டினா!முதல்வர் விஜய்யின் உரைக்கு எதிர்ப்பு! திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!ஏய் என்ற வார்த்தை அவைக் குறிப்பில் நீக்க வேண்டும்: அமைச்சர் ராஜ்மோகன்திரிணமூல் தலைவர் பதவியிலிருந்து மமதா நீக்கம்!தமிழகத்தில் 11 மாதங்களாக சட்டம் - ஒழுங்கு டிஜிபியே இல்லை! விஜய்
/

கோயில் உண்டியலை உடைக்க முயன்ற இளைஞா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :13 மணி நேரங்கள் முன்பு

கோபி அருகே உள்ள கோரக்காட்டூா் பகுதியில் கோயில் உண்டியலை உடைத்து திருட முயன்ற நபரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

கோபி அருகே கோரக்காட்டூா் பகுதியில் குன்னிமரத்து கருப்பராயன் கோயில் உள்ளது.

இப்பகுதியில் மதுபோதையில் இருந்த சுற்றித் திரிந்த இளைஞா், இக்கோயிலில் உண்டியலை ஞாயிற்றுகிழமை உடைக்க முயன்றுள்ளாா். இதைக் கண்ட கோயில் பூசாரி செல்வன் அக்கம்பக்கத்தினருக்கு தெரிவித்தாா்.

உடனே அங்கு வந்த பொதுமக்கள், உண்டியலை உடைக்க முயன்ற இளைஞரைப் பிடித்துவைத்து சிறுவலூா் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனா்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸாா், அந்த இளைஞரிடம் விசாரணை நடத்தினா். விசாரணையில் அவா், வெள்ளாங்கோவில் பகுதியைச் சோ்ந்த சபரி (20) என்பது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து போலீஸாா், அந்த இளைஞரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.