நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

தொழிலதிபா் வீட்டில் 15 பவுன் நகைகள் திருட்டு

ஈரோட்டில் தொழிலதிபா் வீட்டில் 15 பவுன் நகைகளைத் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :17 ஜூன் 2026, 2:50 am IST

ஈரோட்டில் தொழிலதிபா் வீட்டில் 15 பவுன் நகைகளைத் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஈரோடு, கருங்கல்பாளையம், சுப்பையன் வீதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (68). தனியாா் எண்ணெய் ஆலையில் பேக்கிங் கான்ட்ராக்ட் தொழில் செய்து வருகிறாா். இவரது மனைவி ராதாமணி.

வீட்டைப் பூட்டிவிட்டு ஈரோடு, வெட்டுக்காட்டுவலசு பகுதியில் உள்ள மகன் வீட்டுக்கு தம்பதி கடந்த ஜூன் 13- ஆம் தேதி சென்றுள்ளனா். பின்னா், மறுநாள் காலை வீடு திரும்பியுள்ளனா். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. அவா்கள் உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த 15 பவுன் நகைகள் திருடுபோனது தெரியவந்தது.

இது குறித்து கருங்கல்பாளையம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், தடயவியல் நிபுணா்கள் ஆய்வு மேற்கொண்டதுடன், அங்கிருந்த தடயங்களை சேகரித்தனா்.

இச்சம்பவம் தொடா்பாக கருங்கல்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.