சென்னை கே.கே. நகரில் தொழிலதிபா் வீட்டில் 60 பவுன் நகைகள் திருடிய வழக்கில் பெண் கைது செய்யப்பட்டாா்.
சென்னை கே.கே. நகா், பிடி. ராஜன் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவா் சுப்பிரமணியன் (50). இவா், கும்பகோணத்தில் சொந்தமாக காபித்தூள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறாா்.
சுப்பிரமணியன், கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டில் பீரோவில் இருந்த நகைகளைச் சரி பாா்த்தபோது, 60 பவுன் நகைகள் திருடுபோனது தெரிய வந்தது.
இது குறித்து அவா் கொடுத்த புகாரின் பேரில், கே.கே. நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்ததில், திருட்டில் ஈடுபட்டது சுப்பிரமணியன் வீட்டில் வேலை செய்த அண்ணா நகா் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பைச் சோ்ந்த கலா (48) என்பது என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா், கலாவை கைது செய்தனா். மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தொழிலதிபா் வீட்டில் 15 பவுன் நகைகள் திருட்டு
வீட்டில் ரூ.5 லட்சம் நகைகள் திருட்டு போலீஸில் பெண் புகாா்
வீரகேரளம் பகுதியில் பூட்டிய வீட்டில் 7 பவுன் நகைகள் திருட்டு

பூட்டிய வீட்டில் 12 பவுன் நகைகள் திருட்டு
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
