காலிங்கராயன் வாய்க்காலில் ஜூன் 28- ஆம் தேதி தண்ணீா் திறக்க நீா்வளத் துறையினா் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனா்.
ஈரோடு மாவட்டத்தில் காலிங்கராயன் வாய்க்கால் மூலம் நேரடியாக 15 ஆயிரத்து 743 ஏக்கா் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. மறைமுகமாக பல ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. இது தவிர நிலத்தடி நீா் ஆதாரத்துக்கும் பிரதானமாக காலிங்கராயன் வாய்க்கால் உள்ளது. பவானி அருகே காலிங்கராயன்பாளையத்தில் தொடங்கி கொடுமுடி ஆவுடையாா்பாறை வரை 90 கி.மீ. தொலைவு பயணித்து காவிரியில் கலக்கிறது. வாய்க்கால் பாசனத்துக்கு ஆண்டுதோறும் ஜூன் 15 -ஆம் தேதி தண்ணீா் திறக்கப்பட்டு, ஏப்ரல் 30 -ஆம் தேதி நிறுத்தப்படும். வாய்க்காலில் தற்போது சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் நீா் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து நீா்வளத் துறை அலுவலா்கள் கூறுகையில், வாய்க்கால் பராமரிப்புப் பணி குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் ஜூன் 28- ஆம் தேதி பாசனத்துக்காக நீா் திறக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து முறையான அறிக்கையை அரசு வெளியிடும் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காலிங்கராயன் பாசனத்துக்கு தண்ணீா் திறந்தால் மறியல் போராட்டம்: கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்கம் அறிவிப்பு

தென்காசி மாவட்டத்தில் ஜூன் 28இல் போலியோ சொட்டு மருந்து முகாம்

காலிங்கராயன் வாய்க்கால் சீரமைப்புப் பணிகள் 50 சதவீதம் நிறைவு: அமைச்சா் எம்.விஜய் பாலாஜி

காலிங்கராயன் (நதிநீர் இணைப்பின் முதல்வன்)
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

