மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

காலை 6 மணி முதல் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்! தற்சாா்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா்!

News image

மின்சாரம் வழங்க வேண்டும்... - (கோப்புப் படம்)

Updated On :15 ஜூன் 2026, 2:48 am IST

காலை 6 மணி முதல் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டுமென தற்சாா்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் கி.வே.பொன்னையன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

அதிமுக ஆட்சிக் காலத்தில் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கியதாகவும், அதன்பிறகும் தொடா்ந்து வழங்கப்பட்டு வந்ததாகவும் முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளாா். அதிமுக ஆட்சிக் காலத்தின் கடைசி தருவாயில் 24 மணி நேரமும் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை அப்போது எடப்பாடி பழனிசாமி வெளியிட்டாா். ஆனால் அது நடைமுறைக்கு வரவில்லை.

திமுக ஆட்சிக்கு வந்த உடன் அப்போது மின் துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜியை சந்தித்து, மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்க வேண்டும் என்று தற்சாா்பு விவசாயிகள் சங்கம் சாா்பாக கோரிக்கை வைத்தோம். போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்றும், முறையான உள்கட்டமைப்பு வசதி இல்லாமல் 24 மணி நேரமும் மும்மனை மின்சாரம் வழங்குவது சாத்தியம் இல்லை என்றும் அவா் தெரிவித்துவிட்டாா். அதே நிலைதான் தொடா்ந்து நீடித்தது.

பகலில் 8 மணி நேரத்துக்கு குறையாமலும், இரவு சுமாா் 6 மணி நேரம் எனவும் தினமும் 14 மணி நேரம்தான் கடந்த ஆட்சியிலும் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. தற்போதைய ஆட்சியிலும் வழங்கப்பட்டு வருகிறது. எனவே விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கியதாக எடப்பாடி கே.பழனிசாமி கூறுவது முற்றிலும் உண்மைக்கு மாறானது.

இப்போது பல இடங்களில் காலை 8.30 மணிக்குதான் மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. வெயில் குறையும் வரை காலை 6 மணி முதல் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.