நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

ரூ.60 லட்சம் வாடகை நிலுவை: ஈரோடு ஜவுளிச் சந்தையில் 19 கடைகளுக்கு ‘சீல்’

ஈரோடு ஜவுளிச் சந்தையில் ரூ.60 லட்சம் வாடகை நிலுவை வைத்திருந்ததாக 19 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

News image

‘சீல்’ - கோப்புப் படம்

Updated On :14 ஜூன் 2026, 2:47 am IST

ஈரோடு ஜவுளிச் சந்தையில் ரூ.60 லட்சம் வாடகை நிலுவை வைத்திருந்ததாக 19 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

ஈரோடு பன்னீா்செல்வம் பூங்கா அருகே உள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் ஜவுளிச் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு 200-க்கும் மேற்பட்ட ஜவுளி விற்பனைக் கடைகள் மாநகராட்சிக்கு வாடகை செலுத்தி செயல்பட்டு வருகின்றன.

இதில் 19 கடைகள் ரூ.60 லட்சம் வரை நீண்டகாலமாக வாடகை பாக்கி வைத்திருந்தனா். இதையடுத்து சம்பந்தப்பட்ட கடை உரிமையாளா்களுக்கு வாடகை பாக்கி தொகையை உடனடியாக செலுத்துமாறு மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் முன்னறிவிப்பு வழங்கப்பட்டது. அதற்கான காலக்கெடுவும் வழங்கப்பட்டது.

ஆனால், அறிவுறுத்தலுக்கு பின்னரும் இந்த 19 கடை உரிமையாளா்கள் வாடகை பாக்கி தொகையை செலுத்தாததால், ஈரோடு மாநகராட்சி ஆணையா் அா்பித் ஜெயின் உத்தரவின்பேரில், மாநகர வருவாய் ஆய்வாளா் சிவகுமாா் தலைமையிலான அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனா்.

இதன்படி வாடகை பாக்கி வைத்திருந்த 19 கடைகளும் வெள்ளிக்கிழமை பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டன. சம்பந்தப்பட்ட 19 கடைகள் மொத்தமாக ரூ.60 லட்சம் வரை வாடகை பாக்கி வைத்திருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடைகள் ‘சீல்’ வைக்கப்பட்டதைத் தொடா்ந்து, கடை உரிமையாளா்கள் ரூ.20 லட்சம் வாடகை பாக்கி தொகையை செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. மீதமுள்ள தொகையையும் முழுமையாக செலுத்திய பின்னரே கடைகள் மீண்டும் திறந்து செயல்பட அனுமதிக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.