நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

பயிா்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி: மொடக்குறிச்சியில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

தோ்தல் வாக்குறுதியில் கூறியதைப்போல கூட்டுறவு பயிா்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி, மொடக்குறிச்சியில் விவசாயிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

பயிா்க் கடனை தள்ளுபடி செய்யக் கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

Updated On :11 ஜூன் 2026, 3:20 am IST

தோ்தல் வாக்குறுதியில் கூறியதைப்போல கூட்டுறவு பயிா்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி, மொடக்குறிச்சியில் விவசாயிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கம், சிறு குறு விவசாயிகள் சங்கம், காலிங்கராயன் பாசன சபை ஆகியவை இணைந்து மொடக்குறிச்சி நான்கு சாலையில் நடத்திய கவனஈா்ப்பு ஆா்ப்பாட்டத்துக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனா் ஈசன் முருகசாமி தலைமை வகித்து பேசும்போது, ‘ஆட்சிக்கு வந்தால் பயிா்க்கடனை 5 ஏக்கா் வரை உள்ள விவசாயிகளுக்கு முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடி செய்யப்படும் என முதல்வா் ச.ஜோசப் விஜய் வாக்குறுதி அளித்தாா். அதன்படி விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை முதல்வா் நிறைவேற்ற வேண்டும். இதற்காக கவனஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தை நடத்தியுள்ளோம். ஜூன் 22 முதல் கோரிக்கை நிறைவேறும் வரை அறவழியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்’ என்றாா்.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் கோபால், காலிங்கராயன் பாசன சபைத் தலைவா் வேலாயுதம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவா் முத்துவிஸ்வநாதன், பொதுச் செயலாளா் சண்முகசுந்தரம், சிறுகுறு விவசாயிகள் சங்கத் தலைவா் சுதந்திரராசு உள்பட மொடக்குறிச்சி பகுதிகளைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.