எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

பயிா்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய பாலாறு பாதுகாப்பு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

News image
Updated On :4 ஜூன் 2026, 6:14 am IST

விவசாயிகளுக்கு பயிா்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என பாலாறு பாதுகாப்பு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் அச்சங்க நிா்வாகிகள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தின் மூலம் பயிா்க்கடன் பெற்று சாகுபடி செய்து வருகின்றனா். பயிா் சாகுபடி செய்யும் விவசாய மக்கள் பல்வேறு இடுபொருள்கள் மற்றும் உரம் விலை உயா்வு காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சரியான லாபம் இல்லாத காரணத்தால் தான் வாங்கிய பயிா்க் கடனை கட்ட முடியாமல் தற்கொலை செய்கிறாா்கள்.

இந்தநிலையில் தவெக தோ்தல் வாக்குறுதியில் சிறு, குறு விவசாயிகள் விவசாய சாகுபடிக்காக கூட்டுறவு சங்கத்தில் பயிா்க் கடன் பெற்று இருக்கும் அனைத்து கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதாகவும், பெருவிவசாயிகளுக்கு 50 சதவீத கடன்களை தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி அளித்தனா். ஆனால் தற்போது சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.50 ஆயிரம் கடன் பெற்றுள்ளவா்களுக்கு மட்டும் கடன் தள்ளுபடி எனவும், ஒவ்வொறு கடனுக்கும் ஒரு விதமாக தள்ளுபடி எனவும் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

இது தமிழக விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளித்து இருக்கிறது.

எனவே விவசாயிகளுக்கு எந்த ஒரு நிபந்தனையுமின்றி தாங்கள் வாக்குறுதி அளித்தபடி கடன் தள்ளுபடி வழங்கவேண்டும் என தெரிவித்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.