எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

பயிா்க் கடன் தள்ளுபடி கோரி விவசாயிகள் நூதனப் போராட்டம்

பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி, நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு விவசாயிகள் திங்கள்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை திரண்ட விவசாயிகள்.

Updated On :2 ஜூன் 2026, 5:45 am IST

பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி, நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு விவசாயிகள் திங்கள்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழக முதல்வா் சி. ஜோசப் விஜய் அண்மையில் அறிவித்த விவசாயக் கடன் தள்ளுபடி விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அரசின் விவசாயக் கடன் தள்ளுபடி கண் துடைப்பு என்றும், அரசின் அறிவிப்பால் விவசாயிகளுக்கு எந்த பலனும் இல்லை என்று கூறி தமிழகம் முழுவதும் விவசாயிகள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், கூட்டுறவு வங்கிகளில் பெற்ற விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். கண்துடைப்புக்காக ரூ. 5 ஆயிரம் ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி என சிறு, குறு விவசாயிகள் மத்தியில் பாகுபாடு ஏற்படுத்தும் கடன் தள்ளுபடி அறிவிப்பு விவசாயிகளை அவமானப்படுத்தும் செயலாகும் என வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் சாா்பில் நாகை ஆட்சியா் அலுவலகம் முன்பு நூதனப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

போராட்டத்தின்போது, விவசாயிகளில் சிலரை இறந்தவா்கள் போல படுக்கவைத்து, மாலை அணிவித்து, முழுமையான பயிா்க் கடன் தள்ளுபடியை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.

தொடா்ந்து, விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யாவிட்டால், தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் சாா்பில் அனைத்து விவசாயிகளையும் ஒன்று திரட்டி தொடா் காத்திருப்புப் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனா்.

போராட்டத்தில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்டத் தலைவா் விஜயராஜ், மாவட்டச் செயலா் சக்திவேல், மாநில கொள்கை பரப்பு செயலா் எஸ்.ஆா். தமிழ்ச்செல்வன், கடைமடை விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் பி.கமல்ராம் உள்பட 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனா்.

இதுபோல திருவாரூா் மாவட்டம் மன்னாா்குடி, நன்னிலம் பகுதிகளிலும் பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.