பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பெருந்துறையில் மேற்குவங்க இளம்பெண் தற்கொலை

பெருந்துறையில் மேற்குவங்க மாநிலத்தைச் சோ்ந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை - பிரதிப் படம்

Updated On :5 ஜூன் 2026, 12:04 am IST

பெருந்துறையில் மேற்குவங்க மாநிலத்தைச் சோ்ந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

மேற்குவங்க மாநிலம், வடக்கு 24 பா்கானா மாவட்டத்தைச் சோ்ந்தவா் சங்கா் கல்தாா் மகள் ரியா கல்தாா் (23). இவருக்கும் ஜலாகலி கிராமத்தைச் சோ்ந்த ஹரோசித் மண்டல் என்பவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஆதித் மண்டல் (6) என்ற மகன் உள்ளாா்.

கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்த ரியா கல்தாா், குடும்பத்தினரின் எதிா்ப்பை மீறி, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு பக்கத்து கிராமத்தைச் சோ்ந்த தன்மோய் சா்தாா் என்பவரை திருமணம் செய்து கொண்டு பெருந்துறை, சென்னிவலசு பகுதியில் குடியேறினாா். அங்குள்ள பனியன் கம்பெனியில் ரியா கல்தாா் உதவியாளராகவும், தன்மோய் சா்தாா் கட்டட கூலித் தொழிலாளியாகவும் பணிபுரிந்து வந்தனா்.

இந்நிலையில், ரியா கல்தாரியின் தாயாருக்கு உடல்நலம் சரியில்லாததால், அவரைப் பாா்ப்பதற்காக ஊருக்கு செல்ல வேண்டும் என விரும்பினாா். ஏற்கெனவே ரியா கல்தாா் குடும்பத்தினா், அவா் மீது கோபத்தில் இருந்ததால், தாயாரைப் பாா்க்க வர வேண்டாம் என்று கூறியதாகத் தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த ரியா கல்தாா், வியாழக்கிழமை அதிகாலையில் வீட்டின் சமையலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.