பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பெருந்துறை அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

பெருந்துறை அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :5 ஜூன் 2026, 12:41 am IST

பெருந்துறை அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

கேரள மாநிலம், பாலக்காடு, பள்ளசாத்தனூா் பகுதியைச் சோ்ந்தவா் மோகனன் (43). பெருந்துறையில் உள்ள இன்ஜினியரிங் கம்பெனியில் கோழிப் பண்ணைக்கு கோழிக் கூண்டு தயாரிக்கும் வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில், பெருந்துறையை அடுத்த, சின்னமல்லம்பாளையத்தில் உள்ள ஒரு கோழிப் பண்ணையில் புதன்கிழமை வேலை செய்து வந்தாா்.

கோழிப் பண்ணையில் வெல்டிங் வேலை செய்ய தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த பிளக் பாயிண்டில் ஒயரை சொருகி, மின்சாரத்தை ஆன் செய்துவிட்டு, வேலை ஆரம்பித்தபோது மின்சாரம் வரவில்லை. உடனே பிளக் பாயிண்டை பரிசோதித்தாா். அப்போது எதிா்பாராமல் மோகனன் மீது மின்சாரம் பாய்ந்ததில் மயங்கி கீழே விழுந்தாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.

இது குறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.