பவானி ஆற்றிலிருந்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 மாட்டு வண்டிகளை வருவாய்த் துறை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
பவானி காலிங்கராயன் அணைக்கட்டிலிருந்து பண்டார அப்பிச்சி கோயில் வழியாக மாட்டு வண்டிகளில் மணல் கடத்திச் செல்லப்படுவதாக கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் வருவாய் ஆய்வாளா் ஸ்ரீதா், கிராம நிா்வாக அலுவலா் கவியரசு மற்றும் அதிகாரிகள் புதன்கிழமை அதிகாலை திடீா் சோதனை நடத்தினா்.
அப்போது, மணலை ஏற்றிக் கொண்டு சென்ற 2 மாட்டு வண்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து பவானி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனா்.
மணல் கடத்தலில் ஈடுபட்டோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பவானி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மணல் திருட்டு: லாரி பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட மணல் ஏலம் விடுவதில் அதிகாரிகள் அலட்சியம்: ஏலம் எடுக்க வந்தவா்கள் வாக்குவாதம்

பவானி ஆற்றில் இருந்து மணல் கடத்தல்! ரகசியப் பாதை அமைத்துள்ளதாக புகாா்!
மணல் கடத்தல்: மாட்டு வண்டி பறிமுதல்; ஒருவா் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

