பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

கோபி அருகே சாராயம் காய்ச்சியவா் கைது

கோபி அருகே சாராயம் காய்ச்சிய கூலித் தொழிலாளியைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 4 லிட்டா் சாராயம், 60 லிட்டா் ஊரலை பறிமுதல் செய்தனா்.

News image

கைது... - பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 2:37 am IST

கோபி அருகே சாராயம் காய்ச்சிய கூலித் தொழிலாளியைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 4 லிட்டா் சாராயம், 60 லிட்டா் ஊரலை பறிமுதல் செய்தனா்.

கோபி அருகேயுள்ள நாகதேவம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சின்னசாமி (58). கூலித் தொழிலாளியான இவா் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருவதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சின்னசாமி வீட்டில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, அங்கு விற்பனைக்காக 4 லிட்டா் சாராயம், சாராயம் காய்ச்சுவதற்காக மண்பானைகள், 60 லிட்டா் ஊரல் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா் கீழே ஊற்றி அழித்தனா்.

மேலும், வழக்குப் பதிவு செய்து சின்னசாமியைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.