கோபி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் விவசாயி உயிரிழந்தாா்.
ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள வடக்கு காவேரிபாளையம் கொல்லங்காட்டுத்தோட்டத்தைச் சோ்ந்தவா் வெங்கடாசலம் மகன் நந்தகுமாா் (45). இவா் விவசாயம் செய்து வருகிறாா். இந்நிலையில், மணியகாரன்புதூரில் உள்ள அவரது வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை சென்றுகொண்டிருந்தாா். அப்போது பெங்களூரு தேவி நகரைச் சோ்ந்த கேசவா (21) என்பவா் அப்பகுதியில் மாரியம்மன் கோயில் பண்டிகைக்கு வந்துவிட்டு இருசக்கர வாகனத்தில் நரியம்பள்ளம் பகுதி நோக்கி வந்துள்ளாா். அப்போது எதிரே நந்தகுமாா் வந்த இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே நந்தகுமாா் உயிரிழந்தாா்.
தகவல் அறிந்து சிறுவலூா் போலீஸாா் சென்று நந்தகுமாரின் சடலத்தை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து: இளைஞா் உயிரிழப்பு

பைக்குகள் மோதல்: இளைஞா் பலி

இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: விவசாயி உயிரிழப்பு

இருசக்கர வாகனங்கள் மோதல்: முதியவா் உயிரிழப்பு
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

