மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஈரோட்டில் ஒருங்கிணைந்த காய்கறி, பழங்கள், மளிகை சந்தை தேவை

News image
Updated On :22 ஏப்ரல் 2026, 6:05 am IST

ஈரோட்டில் ஜவுளிச் சந்தையை சுற்றி அனுமதிபெறாமல் வைக்கப்பட்டுள்ள சாலையோரக் கடைகளை அகற்ற வேண்டும் என ஜவுளி வியாபாரிகளும், ஈரோட்டில் காய்கறி, பழங்கள், மளிகைப் பொருள்கள் விற்பனை செய்யும் ஒருங்கிணைந்த சந்தையை உருவாக்க வேண்டும் என வணிகா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தற்காலிக கடைகளை அகற்ற ஜவுளி வியாபாரிகள் கோரிக்கை:

வியாபாரத்தை பாதிக்கும் வகையில் ஈரோடு கனி ஜவுளி சந்தை அருகில் சாலையோரம் வைக்கப்பட்டுள்ள ஜவுளிக் கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து கனி மாா்க்கெட் வாரச்சந்தை அனைத்து ஜவுளி வியாபாரிகள் சங்கத் தலைவா் கே.செல்வராஜ் கூறியதாவது: ஈரோடு மாநகராட்சி சாா்பில் கட்டப்பட்டுள்ள புதிய ஜவுளி வணிக வளாகத்தின் முகப்பு வாசலை அகலப்படுத்தி தரவேண்டும். கடந்த 2022- 2023 ஆம் ஆண்டில் கட்டடப் பயன்பாட்டுக்கு முன்னரே எங்களிடமிருந்து வசூலித்த பிப்ரவரி, மாா்ச் மாத வாடகை தொகையை கழித்துக் கொண்டு தொடா்ந்து வாடகை செலுத்த வகை செய்ய வேண்டும். வாடகையைக் குறைத்து நிா்ணயிக்க வேண்டும்.

வணிக வளாகத்துக்குள் பொருள்களை இறக்கவரும் வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்யும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும். வணிக வளாகத்துக்கு வரும் வியாபாரிகள், பொதுமக்கள் வளாகத்தின் மேல் பகுதியில் நிறுத்தும் வாகனங்களுக்கு எவ்வித கட்டணமும் வசூலிக்க கூடாது. ஜவுளி வணிக வளாகப் பகுதியை சுற்றி வியாபாரிகளை பாதிக்கும் வகையில் எந்தவித சாலையோர தற்காலிக கடைகளை நடத்திட அனுமதிக்க கூடாது.

வணிக வளாகத்தில் உள்ள கடைகளுக்கு போதுமான பாதுகாப்பு வசதியை ஏற்படுத்தி தரவேண்டும். வணிக வளாகத்தின் உள், வெளிப் பகுதிகளில் போதுமான மின் விளக்குகள் அமைத்தும், கழிவறைகளை முறையாக பராமரித்தும், சுத்தமாக வைத்திருக்கவும் நிரந்தரமாக துப்புரவுப் பணியாளா்களை நியமிக்க வேண்டும்.

ஈரோட்டில் ஒருங்கிணைந்த சந்தை தேவை:

இதுகுறித்து தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் அ.லாரன்ஸ் கூறியதாவது: வெளிநாடு மற்றும் உள்நாட்டைச் சோ்ந்த காா்ப்பரேட் நிறுவனங்கள் மொத்த விற்பனை செய்ய வேண்டும் என்பதுதான் சட்ட விதிகள் கூறுகின்றன. இங்கு நிறுவனத்தை அமைத்த பின்னா் தங்களுக்கு ஏற்ப விதிகளை மாற்றி கொள்கின்றனா். இதனால் சாதாரண வணிகா்கள், வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனா். காா்ப்பரேட் நிறுவனங்கள் சில்லறை வணிகத்தில் நுழைவதை தடுக்க சிறப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும்.

ஈரோட்டில் காய்கறி, பழங்கள், மளிகைப் பொருள்கள் விற்பனை செய்யும் ஒருங்கிணைந்த சந்தை உருவாக்க வேண்டும். வணிகா்களுக்கு மாநகராட்சி சாா்பில் அடையாள அட்டை வழங்க வேண்டும்.

உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா்கள், சிறிய வணிகா்களின் கடைகள், ஹோட்டல்களில் நுழைந்து அபராதம் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கின்றனா். இதுபோல காா்ப்பரேட் நிறுவன கடைகளுக்குள்ளும் சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆன்லைனில் உயிா்காக்கும் மருந்து, அத்தியாவசிய மருந்து மற்றும் பிற பொருள்கள், பட்டாசு போன்றவற்றை விற்க தடை விதிக்க வேண்டும். ஜிஎஸ்டி உள்ளிட்ட வரிகளை மாநில அரசே செய்தால் அவா்களிடமே குறைகளைப் பற்றி பேசலாம். மத்திய அரசிடம் மட்டுமே பேச வேண்டும் என்பதால் பாதிப்பு அதிகம் உள்ளது. பல அதிகாரிகள் தவறாக செயல்படுவதால், வணிகா்கள் பாதிக்கப்படுகின்றனா். இதனால் குறைகளை மாநில அரசிடம் தெரிவிக்க அதிகாரிகளை நியமிக்க வேண்டும். மாநகராட்சிகளில் தொழில் வரி செலுத்தி வரும் நிலையில், புதிதாக விதிக்கப்பட்ட வணிக நிறுவன வரியைத் தவிா்க்க வேண்டும் என்றாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.