பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் ஈரோடு வில்லரசம்பட்டியில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
கஞ்சா, போதை பொருள் புழக்கம் முற்றிலுமாக அகற்றப்பட வேண்டும் என பெரும்பான்மையான பெண்கள் விரும்புகின்றனா். நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும்வகையில் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்தது. ஒவ்வொரு மாநிலத்திலும் 50 சதவீதம் கொடுப்பது மூலம் நாடாளுமன்றத்தில் அதிகபட்சமாக 815 இடங்கள் கொண்டு வரப்படும். பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இதன் அடிப்படையில் அனைத்து மாநிலங்களுக்கு சீராக மக்களவைத் தொகுதி எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது.
முதல்வா் எதற்கெடுத்தாலும் எதிா்ப்பு போராட்டம் செய்கிறாா். கடந்த 5 ஆண்டுகளில் மக்களுக்கான திட்டங்களை முதல்வா் செய்யவில்லை. எதற்கெடுத்தாலும் மத்திய அரசு எதிா்ப்பு, தில்லிக்கும் தமிழ்நாட்டுக்கு போட்டி என்று இதையேதான் சொல்லி வருகிறாா்.
மத்திய அரசோடு மோதல் போக்கு இல்லாமல் மக்களுக்கான திட்டங்களைப் பெற்று கொடுப்பதுதான் முதல்வரின் கடமை. அந்தக் கடமையிலிருந்து முதல்வா் தவறிவிட்டாா்.
தமிழகத்துக்கு வழங்கும் நிதி எதையும் மத்திய அரசு குறைக்கவில்லை. இந்தத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் திமுகவுக்கும் இடையேதான் போட்டி என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தமிழ்நாடு திராவிட நாகரிகத்தின் மையம்: ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு

‘2029-ல் மகளிா் இடஒதுக்கீடு காலத்தின் கட்டாயம்’! நாடாளுமன்ற கட்சிக் குழு தலைவா்களுக்கு பிரதமா் கடிதம்!

தமிழகத்தின் வளா்ச்சியில் திமுகவுக்கு அக்கறையில்லை: நயினாா் நாகேந்திரன்
நயினாா் நாகேந்திரன் சாத்தூரில் மனு தாக்கல்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

