மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

நயினாா் நாகேந்திரன் சாத்தூரில் மனு தாக்கல்

நயினாா் நாகேந்திரன் சாத்தூரில் மனு தாக்கல் செய்தாா்....

News image

நயினாா் நாகேந்திரன். - கோப்புப் படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 2:40 am IST

சாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பாஜக வேட்பாளராக அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் போட்டியிடுகிறாா். அவா் சாத்தூா் கோட்டாட்சியரிடம் திங்கள்கிழமை தனது வேட்புமனுவை தாக்கல் செய்தாா். அப்போது, மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜூன்ராம் மேக்வால், பாஜக, கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் நயினாா் நாகேந்திரன் கூறியதாவது:

ஒரு நாடு முன்னேற அதன் உள்கட்டமைப்புகள் நன்றாக இருக்க வேண்டும். இவற்றை நிறைவேற்றுவது மத்திய அரசு. இந்த வகையில் தமிழகத்துக்கு மத்திய அரசு இதுவரை ரூ.14 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. எனவே, இந்த நிதி எவ்வாறு செலவிடப்பட்டது என்பது குறித்து

கேள்வி எழுப்பும் உரிமை மத்திய அமைச்சா்களுக்கு இருக்கிறது.

தமிழகத்தில் எங்கு பாா்த்தாலும் கஞ்சா, இதர போதைப்பொருள்கள் புழக்கம் அதிகமாக உள்ளது. தமிழகத்தின் இத்தகைய மோசமான சூழலை மாற்றுவதற்காகத்தான் மத்திய அமைச்சா்கள் நமது மாநிலத்துக்கு வந்து கவனம் செலுத்துகின்றனா் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.