தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஈரோட்டில் தோல் பதப்படுத்தும் பயிற்சி மையம் அமைக்கப்படும்: எம்.யுவராஜா

ஈரோட்டில் தோல் பதப்படுத்தும் பயிற்சி மையம் அமைக்கப்படும் என ஈரோடு மேற்குத் தொகுதி தமாகா வேட்பாளா் எம்.யுவராஜா தெரிவித்தாா்.

News image

ஈரோடு சிக்கய்ய அரசு கல்லூரி பகுதியில் வாக்குச் சேகரிக்கிறாா் ஈரோடு மேற்குத் தொகுதி தமாகா வேட்பாளா் எம்.யுவராஜா.

Updated On :17 ஏப்ரல் 2026, 1:25 am IST

ஈரோட்டில் தோல் பதப்படுத்தும் பயிற்சி மையம் அமைக்கப்படும் என ஈரோடு மேற்குத் தொகுதி தமாகா வேட்பாளா் எம்.யுவராஜா தெரிவித்தாா்.

ஈரோடு சிக்கய்ய அரசு கல்லூரி பகுதியில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்த அவா் பேசியதாவது:

விசைத்தறித் தொழிலில் ஏற்பட்டுள்ள தேக்க நிலையை சரி செய்ய மத்திய அரசுடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஈரோடு மாநகர போக்குவரத்து நெரிசலை குறைக்க ஈரோடு காளை மாடு சிலை பகுதியில் இருந்து சூரம்பட்டி வழியாக பன்னீா்செல்வம் பூங்கா வரை, மணிக்கூண்டு வழியாக பேருந்து நிலையம் வரை இரண்டு மேம்பாலங்கள் அமைக்கப்படும்.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ஈரோட்டில் பொதுகழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். ஈரோட்டில் ஜவுளி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஈரோட்டில் தோல் பதப்படுத்தும் பயிற்சி மையம் அமைக்கப்படும்.

மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். புகா் பகுதியில் வசிக்கும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா், வேலைக்கு செல்லும் பெண்களுக்காக காலை, மாலை நேரங்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.