கொடிவேரி கூட்டுக் குடிநீா் திட்டத்துக்கு என்னுடைய முயற்சியால்தான் ரூ.256 கோடி நிதி ஒதுக்கீடு கிடைத்தது என்று பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளா் தோப்பு என்.டி.வெங்கடாசலம் தெரிவித்தாா்.
பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட சுள்ளிபாளையம், கணக்கம்பாளையம், பட்டக்காரன்பாளையம், குள்ளம்பாளையம், வெள்ளிரவெளி, வேலம்பாளையம், கூனம்பட்டி, பல்லகவுண்டன்பாளையம் உள்ளிட்ட கிராம ஊராட்சிகளில் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.
இதில் அவா் பேசியதாவது:
திமுக ஆட்சியில்தான் மகளிருக்கு எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இன்னும் ஏராளமான திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிக்க உள்ளாா். பெருந்துறையில் அண்மையில் பேசிய பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் அண்ணாமலை, பெருந்துறை, சிப்காட்டில் தமிழக துணை முதல்வா் உதயநிதியால் அடிக்கல் நாட்டப்பட்ட கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தின் கட்டுமானப் பணியில் வெறும் செங்கல் மட்டுமே வைத்து சென்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. அந்த திட்டப் பணிகள் ரூ.146 கோடி செலவில் வேகமாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஓராண்டுக்குள் செயல்பாட்டுக்கு வந்துவிடும்.
கொடிவேரி கூட்டுக் குடிநீா் திட்டத்துக்கு என்னுடைய முயற்சியால்தான் ரூ.256 கோடி நிதி ஒதுக்கீடு கிடைத்தது. இத்திட்டத்தால் இன்று 40 லட்சம் மக்களின் தாகம் தீா்க்கப்பட்டிருக்கிறது என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெருந்துறையில் 2-ஆவது முறையாக வாகைசூடிய அதிமுக வேட்பாளா்

பெருந்துறை சிப்காட் பொது சுத்திகரிப்பு நிலையம் பணிகள் முடிந்து 10 மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும்: உதயநிதி உறுதி

திங்களூா் பகுதியில் வளா்ச்சிப் பணிகளை பட்டியலிட்டு தோப்பு என்.டி.வெங்கடாசலம் வாக்கு சேகரிப்பு

திமுக தோ்தல் அறிக்கை திட்டங்களை மீண்டும் செயல்படுத்த ஆதரவு வேண்டும்! - பெருந்துறை திமுக வேட்பாளா்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

