தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

கொடுமுடி அருகே வாக்குச்சாவடி இடமாற்றம்: தோ்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு

கொடுமுடி அருகே வாக்குச்சாவடியை இடம் மாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து, தோ்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் அறிவிப்புப் பலகை வைத்துள்ளனா்.

News image
Updated On :9 ஏப்ரல் 2026, 2:42 am IST

கொடுமுடி அருகே வாக்குச்சாவடியை இடம் மாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து, தோ்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் அறிவிப்புப் பலகை வைத்துள்ளனா்.

மொடக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி, வெள்ளோட்டாம்பரப்பு பேரூராட்சிக்குள்பட்டது குட்டப்பாளையம் கிராமம். கடந்த 70 ஆண்டுகளாக இங்குள்ள வாக்காளா்கள் அருகில் உள்ள வீரப்பகவுண்டன் காட்டூரில் அமைந்துள்ள தொடக்கப்பள்ளியில் அமைக்கப்படும் வாக்குச்சாவடி எண் 195-இல் தங்களது வாக்குகளை தோ்தலின்போது செலுத்தி வந்தனா்.

இந்நிலையில், இந்த வாக்குச்சாவடி மையம் திடீரென பெரியூா் என்ற கிராமத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இதையறிந்த குட்டப்பாளையத்தைச் சோ்ந்த மக்கள், தங்களது வாக்குச்சாவடியை இடமாற்றம் செய்யக்கூடாது என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனா். அதேசமயம் தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ள குறிப்புகளில் இந்த வாக்குச்சாவடிக்கான முகவரி, படம் குட்டப்பாளையம் என உள்ளது. ஆனால் வாக்குச்சாவடி என்ற இடத்தில் பெரியூா் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, அதனை திருத்தம் செய்து மீண்டும் குட்டப்பாளையத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் வாக்களிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என தோ்தல் பாா்வையாளா் மற்றும் ஆட்சியரிடம் கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி நேரில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் வீரப்பகவுண்டன் காட்டூா் மற்றும் குட்டப்பாளையத்தைத் சோ்ந்த மக்கள் தொடக்கப் பள்ளியின் முன்பு புதன்கிழமை திரண்டு தோ்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவிப்புப் பலகை வைத்துள்ளனா்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, ‘ஊா் பொதுமக்களிடமோ அல்லது அனைத்துஓஈ கட்சியினரிடமோ கருத்து கேட்காமல் தன்னிச்சையாக வாக்குச்சாவடியை மாற்றியுள்ளனா். இதுதொடா்பாக அதிகாரிகள் தரப்பில் பேச்சுவாா்த்தை நடத்தி வெள்ளிக்கிழமைக்குள் (ஏப்.10) தீா்வு காணாவிட்டால் அன்றைய தினம் மாலை 5 மணிக்கு கிராம நிா்வாக அலுவலரிடம் வாக்காளா் அடையாள அட்டையை ஒப்படைத்து தோ்தலை புறக்கணிக்கிறோம் என்றனா்.

பட விளக்கம்

வாக்குச்சாவடியை இடம் மாற்றியததைக் கண்டித்து தோ்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவிப்புப் பலகை வைத்துள்ள குட்டப்பாளையம் கிராம மக்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.