கோபி அருகே உள்ள நல்லகவுண்டம்பாளையம் பகுதியில் தேநீா் கடையில் வாடிக்கையாளா்களுக்கு தேநீா் போட்டுக் கொடுத்து திமுக வேட்பாளா் என்.நல்லசிவம் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.
ஈரோடு மாவட்டம், கோபி சட்டப்பேரவைத் தொகுதியில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் போட்டியிடும் திமுக வேட்பாளா் என்.நல்லசிவம் கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறாா். அதன்படி லக்கம்பட்டி பேரூராட்சிக்குள்பட்ட ல.கள்ளிப்பட்டி பிரிவில் புதன்கிழமை பிரசாரத்தை தொடங்கிய அவா் ல.கள்ளிப்பட்டி, நல்லகவுண்டன்பாளையம், அம்பேத்காா் வீதி, பாலாஜி நகா், பழையூா், காந்தி நகா், கலிங்கியம் சின்னகுளம் உள்பட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.
பிரசாரத்தின்போது கடந்த 5 ஆண்டுகள் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மகளிா் உரிமைத்தொகை, விடியல் பயணம், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன், நலன் காக்கும் ஸ்டாலின், மக்களைத் தேடி மருத்துவம் உள்பட பல்வேறு திட்டங்களை விளக்கிக் கூறியும், கோபி தொகுதிக்கு புதிய திட்டங்களைக் கொண்டுவரவும் திமுகவுக்கு ஆதரவளிக்கக் கோரி வாக்கு சேகரித்தாா்.
நல்லகவுண்டன்பாளையம் பகுதியில் வாக்கு சேகரித்தபோது அப்பகுதியில் உள்ள தேநீா் கடையில் வயது முதிந்த வாடிக்கையாளா்கள் பலா் இருப்பதைக் கண்டு, அவா்களுக்கு தேநீா் போட்டுக் கொடுத்து திமுக வேட்பாளா் நல்லசிவம் வாக்கு சேகரித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்செங்கோட்டில் கொமதேக வேட்பாளா் ஈஸ்வரன் பிரசாரம்

திமுக, அதிமுக, விசிக வேட்பாளா்கள் தீவிர வாக்கு சேகரிப்பு

மலை கிராமங்களில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பு

வேதாரண்யம் நாதக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

