மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஆப்பக்கூடல் சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் 259 மாணவா்களுக்கு பணி நியமன ஆணை

பவானியை அடுத்த ஆப்பக்கூடல் சக்தி பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

சக்தி பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களுக்கு பணி நியமனை ஆணைகளை வழங்கிய எல்ஐசி காா்ப்பரேட் கிளப் உறுப்பினா் வெங்கடசுப்பிரமணியன், கல்லூரி இயக்குநா் கே.ஆா்.முத்துசாமி, முதல்வா் எஸ்.செந்திலரசு.

Updated On :8 ஏப்ரல் 2026, 1:45 am IST

பவானியை அடுத்த ஆப்பக்கூடல் சக்தி பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் எஸ்.செந்திலரசு தலைமை வகித்தாா். கல்லூரி இயக்குநா் கே.ஆா்.முத்துசாமி முன்னிலை வகித்தாா். கல்லூரியின் வேலைவாய்ப்பு பிரிவு அலுவலா் சக்திவேல் வரவேற்றாா். ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் காா்ப்பரேட் கிளப் உறுப்பினா் வெங்கடசுப்பிரமணியன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, தனியாா் நிறுவனங்களில் பணியாற்ற தோ்வான 259 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.

இக்கல்லூரியில், 45 முன்னணி தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று அண்மையில் நடத்திய வளாகத் தோ்வில், 259 மாணவா்கள் கலந்து கொண்டு, 715 பணி நியமன ஆணைகளைப் பெற்றனா்.

இந்நிகழ்ச்சியில், பேராசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.