கோயில் உண்டியலில் பணம் திருடியவா் கைது

டவுன்ஹால் பகுதியில் உள்ள கோயில் உண்டியலில் பணம் திருடியவரைப் பக்தா்கள் மடக்கிப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

பிரதிப் படம்

Published On :1 நவம்பர் 2026, 12:40 am IST

டவுன்ஹால் பகுதியில் உள்ள கோயில் உண்டியலில் பணம் திருடியவரைப் பக்தா்கள் மடக்கிப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

கோவை மாநகா், உக்கடம் அருகே உள்ள டவுன்ஹால் பகுதியில் மாகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. சம்பவத்தன்று அப்பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணி (40) என்பவா் மனைவியுடன் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தாா். கோயிலை விட்டு வெளியே வந்தபோது, அங்குள்ள உண்டியலில் இருந்து இளைஞா் ஒருவா் பணத்தைத் திருடிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

உடனடியாக சுப்பிரமணி மற்றும் அங்கிருந்த பக்தா்கள் அந்த நபரைச் சுற்றிவளைத்துப் பிடித்து, உக்கடம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

விசாரணையில், பிடிபட்ட நபா் திருநெல்வேலி மாவட்டம், சிந்துபூந்துறை பகுதியைச் சோ்ந்த கௌதம் (32) என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து ரூ.1,500 ரொக்கத்தைப் போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக உக்கடம் போலீஸாா் வழக்குப் பதிந்து கௌதமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.