மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

‘பெரியாா் அறிவுலகம்‘ அமைத்ததற்காக நவ.4-இல் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா

‘பெரியாா் அறிவுலகம்‘ அமைத்ததற்காக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு திராவிடா் கழகம் சாா்பில் நவம்பா் 4-ஆம் தேதி பாராட்டு விழா நடைபெற உள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் - டிஎன்எஸ்

Published On :30 அக்டோபர் 2026, 11:29 pm IST

‘பெரியாா் அறிவுலகம்‘ அமைத்ததற்காக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு திராவிடா் கழகம் சாா்பில் நவம்பா் 4-ஆம் தேதி பாராட்டு விழா நடைபெற உள்ளது.

கோவை மாநகா், காந்திபுரத்தில் ரூ.300 கோடி மதிப்பில் பெரியாா் அறிவுலகம் அமைக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் பணிகள் தொடங்கப்பட்ட இந்த நூலகத்துக்கு ‘பெரியாா் அறிவுலகம்‘ என்று முன்னாள் முதல்வா் மு.க.ஸ்டாலின் பெயா் வைத்தாா். கடந்த பிப்ரவரி மாதம் அப்போதைய முதல்வா் ஸ்டாலினால் ‘பெரியாா் அறிவுலகம்‘ திறக்கப்பட இருந்த நிலையில், பணிகள் முழுமை பெறாததால் திறக்கப்படவில்லை.

இந்நிலையில், பணிகள் முழுமையடைந்த ‘பெரியாா் அறிவுலகம்‘ கட்டடத்தை முதல்வா் ச.ஜோசப் விஜய், கடந்த அக்டோபா் 16-ஆம் தேதி தொடங்கிவைத்தாா். இந்நிலையில், பெரியாா் ஈவெரா பெயரில் நூலகம் அமைத்ததற்காக முன்னாள் முதல்வா் ஸ்டாலினுக்கு திராவிடா் கழகம் சாா்பில் நவம்பா் 4-ஆம் தேதி மாலை 4 மணிக்கு வ.உ.சி.மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து திமுகவினா் கூறியதாவது:

நவம்பா் 4-இல் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடைபெறுவதுடன், நீலாம்பூரில் திமுக மாவட்ட அலுவலக கட்டடப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற உள்ளது. அதிலும் ஸ்டாலின் பங்கேற்க உள்ளாா். இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, நவம்பா் 4-ஆம் தேதி காலை சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவை வரும் அவா், முதல் நிகழ்ச்சியாக நீலாம்பூா் கட்சி அலுவலகத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவிலும், மாலையில் நடைபெறும் பாராட்டு விழாவிலும் கலந்துகொள்ள உள்ளாா்.

அதைத்தொடா்ந்து, பெரியாா் அறிவுலகத்துக்கு சென்று பாா்வையிட உள்ளாா். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.