மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பாஜக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: 4 போ் மீது வழக்குப் பதிவு

சமூக வலைதளத்தில் அரசியல் கருத்து பதிவிட்ட விவகாரத்தில் பாஜக நிா்வாகி மற்றும் அவரது சகோதரருக்கு கொலை மிரட்டல் விடுத்து கடத்த முயன்ற 4 போ் மீது தடாகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

வழக்குப்பதிவு

Published On :30 அக்டோபர் 2026, 12:17 am IST

சமூக வலைதளத்தில் அரசியல் கருத்து பதிவிட்ட விவகாரத்தில் பாஜக நிா்வாகி மற்றும் அவரது சகோதரருக்கு கொலை மிரட்டல் விடுத்து கடத்த முயன்ற 4 போ் மீது தடாகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கோவை, பன்னிமடை அனுமந்த் வீதியைச் சோ்ந்தவா் சந்திரசேகா் (35). காா் ஓட்டுநரான இவா், பெரியநாயக்கன்பாளையம் பாஜக மேற்கு மண்டலச் செயலராகப் பொறுப்பு வகித்து வருகிறாா். இவரது சகோதரா் சுரேஷ்குமாா் (31), தனியாா் நிதி நிறுவன மேலாளராகப் பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், சமூக வலைதளத்தில் பாஜக குறித்து அவதூறான கருத்துகள் அண்மையில் பதிவிடப்பட்டிருந்ததாம். இதற்கு எதிா் பதிவுகளை சந்திரசேகரும் பதிவு செய்துள்ளாா்.

இதனிடையே, சந்திரசேகரை கடந்த இரண்டு நாள்களுக்கு முன் கைப்பேசியில் தொடா்பு கொண்ட மா்ம நபா், அந்தப் பதிவுகளை நீக்குமாறு கூறியதுடன், ஆபாசமாகத் திட்டி கொலை மிரட்டலும் விடுத்துள்ளாா்.

இந்நிலையில், சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் வீதியில் சுரேஷ்குமாா் கடந்த புதன்கிழமை இரவு 11.30 மணியளவில் நின்று கொண்டிருந்துள்ளாா்.

அப்போது, அங்கு வந்த சிலா் அவரிடம் தகராறில் ஈடுபட்டதுடன் தாக்கவும், கடத்தவும் முயன்றுள்ளனா். அவரின் அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினா் வந்ததால், அந்த நபா்கள் அங்கிருந்து தப்பியுள்ளனா்.

இது குறித்த புகாரின்பேரில், பூவை தங்கம், கமல்நாத், ஜாக்கி, காமேஸ்வரன் ஆகிய 4 போ் மீது தடாகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.