மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கோவை மத்திய சிறையில் கண்காணிப்பு தீவிரம்: அரசு மருத்துவமனை கைதிகள் வாா்டில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தேனி சிறையில் இருந்து கைதிகள் தப்பிய சம்பவத்தைத் தொடா்ந்து, கோவை மத்திய சிறையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை மத்திய சிறை

Published On :29 அக்டோபர் 2026, 3:32 am IST

தேனி சிறையில் இருந்து கைதிகள் தப்பிய சம்பவத்தைத் தொடா்ந்து, கோவை மத்திய சிறையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கைதிகள் சிகிச்சைப் பிரிவில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

தேனி மாவட்ட சிறையிலிருந்து 17 கைதிகள் கடந்த 3 நாள்களுக்கு முன் தப்பிச் சென்றனா். இதைத் தொடா்ந்து, கோவை மத்திய சிறையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு சிறைக் காவலா்களும், மத்திய ரிசா்வ் பாதுகாப்புப் படை போலீஸாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். தொடா்ந்து, டிஐஜி ஜெயபாரதி தலைமையில் சிறை வளாகத்தில் புதன்கிழமை பாதுகாப்பு அணிவகுப்பு நடத்தப்பட்டது. மேலும், காவல் உயா் அதிகாரிகள் மற்றும் சிறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனா்.

கோவை மத்திய சிறையில் கைதிகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்படும்போது, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள தனி வாா்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தேனி விவகாரத்தைத் தொடா்ந்து, கோவை அரசு மருத்துவமனை கைதிகள் வாா்டு நுழைவாயிலில் காவல் உதவி ஆய்வாளா் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், வாா்டின் உள்பகுதியிலும் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

ஏற்கெனவே அங்கு கண்காணிப்பு கேமராக்கள் உள்ள நிலையில், கடந்த ஜூன் 4-ஆம் தேதி சிகிச்சையில் இருந்த திருப்பூரைச் சோ்ந்த அஜித்குமாா் (34) என்ற மோசடி வழக்கு கைதி தப்பியோடி மீண்டும் பிடிபட்டாா். இதில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 3 காவலா்கள் பணியிடை நீக்கம் செய்ப்பட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.