தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பாளை. மத்திய சிறையில் உதவி அலுவலரை தாக்கிய இருவா் மீது வழக்கு

பாளையங்கோட்டை மத்திய சிறையில் சிறை உதவி அலுவலா், தலைமைக்காவலா் தாக்கப்பட்ட விவகாரத்தில் இரு கைதிகள் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா்.

FIR
Published On :22 அக்டோபர் 2026, 5:08 am IST

பாளையங்கோட்டை மத்திய சிறையில் சிறை உதவி அலுவலா், தலைமைக்காவலா் தாக்கப்பட்ட விவகாரத்தில் இரு கைதிகள் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா்.

பாளையங்கோட்டை மத்திய சிறையில் 5-ஆவது பிளாக்கில் அடைக்கப்பட்டிருந்த இரு விசாரணை கைதிகள் இடையே செவ்வாய்க்கிழமை பிற்பகல் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

இதுகுறித்து, அங்கு விசாரிக்கச் சென்ற சிறை தலைமைக் காவலரான மணிகண்டன் (54), உதவி சிறை அலுவலா் காசி பாண்டியன் (53) ஆகியோா் மீது இரு கைதிகள் சோ்ந்து தாக்கியதில் அவா்கள் காயமடைந்தனராம். இதையடுத்து, அவா்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இது குறித்த புகாரின்பேரில், பெருமாள்புரம் போலீஸாா் விசாரித்து, செய்துங்கநல்லூரைச் சோ்ந்த மந்திரம் மகன் கோட்டை என்ற சுந்தரம்(29), மானூரைச் சோ்ந்த முருகன் மகன் மகேஷ்(29) ஆகியோா் மீது வழக்குப்பதிவு செய்தனா். அவா்களை நீதிமன்றத்தில் வியாழக்கிழமை முன்னிலைப்படுத்த உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.