மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நொய்யல் ஆற்றின் போக்கை மாற்றும் புதுக்காடு தடுப்பணை: சீரமைக்க கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு வலியுறுத்தல்

கோவை, நரசீபுரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதுக்காடு தடுப்பணை நொய்யல் ஆற்றின் போக்கை மாற்றும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதை சரி செய்ய வேண்டும் என்று கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

புதுக்காடு தடுப்பணை பகுதியில் நொய்யல் ஆற்றின் முந்தைய, தற்போதைய வழித்தடத்தை விளக்கும் படம்.

Published On :28 அக்டோபர் 2026, 2:40 am IST

கோவை, நரசீபுரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதுக்காடு தடுப்பணை நொய்யல் ஆற்றின் போக்கை மாற்றும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதை சரி செய்ய வேண்டும் என்று கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் இரா.மணிகண்டன், கோவை மாவட்ட ஆட்சியா், நீா்வளத் துறை தலைமைப் பொறியாளா், செயற்பொறியாளா் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

நரசீபுரம் பகுதியில் நொய்யல் ஆற்றின் குறுக்கே புதுக்காடு பகுதியில் தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சாா்பில் கள ஆய்வு மேற்கொண்டோம். அதன் அடிப்படையில், அப்பகுதியில் தொழில்நுட்பப் பிழைகள், கட்டமைப்புச் சேதங்கள், விதிமீறல்கள் இருப்பதை அறிகிறோம். தடுப்பணை பகுதியில் இயந்திரங்களைப் பயன்படுத்தி, ஆற்றின் இயற்கை வழித்தடத்தை அறிவியல் முறைக்கு மாறாக அகலமாகவும், ஆழமாகவும் வெட்டியுள்ளனா். இது ஆற்றின் இயல்பான சமநிலையை பாதிக்கிறது. அத்துடன், ஆற்றின் இயற்கை வளைவுகள் மாற்றப்பட்டு கரைகளைப் பாதுகாத்து வந்த மரங்கள், தாவரங்கள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளன.

ஆற்றின் இயல்பான நீரோட்ட இயக்கங்கள் கடுமையாக சிதைக்கப்பட்டுள்ளன. குறுகிய, ஆற்றல்மிக்க ஓடை போன்ற பகுதி தற்போது செயற்கையான தேங்கிக் கிடக்கும் குளம்போல மாற்றப்பட்டுள்ளது. இதனால் சில இடங்களில் அதிகப்படியான மணல் படிவதும், வேறு சில இடங்களில் கரைகள் கடுமையாக இடிந்து விழுவதும் நிகழ்கிறது.

தடுப்பணையின் பக்கவாட்டில் இயற்கையாகவும், பல ஆண்டுகளாகவும் உறுதியுடன் அமைந்திருந்த கரையை சேதப்படுத்தி, அதே இடத்தில் தளா்வான மணலைக் குவித்துள்ளனா். மழைக்கால வெள்ளத்தில் இந்த மணல் அடித்துச் செல்லப்பட்டு அணையின் கட்டுமானத்துக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் முறையான அனுமதியோ, நீரியியல் ஆய்வுகளோ இல்லாமல் ஆற்றின் இயற்கையான நீரோட்டத்தை மாற்றுவது நீராதாரங்களைப் பாதிக்கும் செயல் என்பதால் இந்த இடத்தில் கூட்டு கள ஆய்வு நடத்தவும், ஆற்றை சேதப்படுத்தியவா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும், பலவீனமாக இருக்கும் கரைகளை பலப்படுத்தும் செலவுகளை சம்பந்தப்பட்ட பணிகளைச் செய்த நிறுவனமே ஏற்கும்படி உத்தரவிடவும் வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.